பேத்திக்குப் பிறந்தநாள் வாழ்த்து 16062019

கொஞ்சிப் பேசும் பைங்கிளியோ
கூவும் இனிய பூங்குயிலோ?
நெஞ்சை யள்ளும் தேன்சிட்டோ
நீல வண்ணப் பெண்மயிலோ?
பஞ்சு போலும் வெண்புறாவோ
பாச முள்ள மைனாவோ?
அஞ்சு கம்போல் வளையவரும்
அழகே உன்பேர் ஆஷினியோ??

*****************************
சின்ன சின்ன ரோசாப்பூ
சிரித்து மணக்கும் செண்பகப்பூ
தென்றல் தழுவும் தாழம்பூ
சிவந்த அழகு தாமரைப்பூ
புன்ன கைக்கும் முல்லைப்பூ
பொலிவாய் மலரும் அல்லிப்பூ
கன்னல் மொழியில் பேசும்பூ
கள்ள மில்லா ஆஷினிப்பூ!!

*****************************

பாசமழை பொழிந்திடுவாள்
பால்நிலவாய்க் குளிர்விப்பாள்!
ஓசையின்றி அற்புதமாய்
ஓவியங்கள் தீட்டிடுவாள்!
ஆசையொடு தங்கையுடன்
ஆனந்த நடம்புரிவாள்!
ஈசனருள் துணையிருக்க இன்புற்று வாழியவே!!!

வாழ்க வளமுடன் ஆஷினிலேகா 🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹

அழகு செல்லத்துக்கு அன்பான வாழ்த்துகள்🌹🌹🌹💐💐💐❤❤❤🌷🌷🌷🍫🍫🍫🎂🎂🎂🎉🎉🎉🎁🎁🎁🎈🎈🎈

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (20-Jun-19, 12:54 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 21
மேலே