முதல் அழுகை

வெளிவர துடித்து
அவளுக்கு வலி கொடுத்தேன்!
வெளிவந்தபோது - மீண்டும்
உள்ளே செல்ல மனம் ஏங்கியதால்
அழுதேன் முதன்முறையாக!
அழுதபோது - அவளின்
அரவணைப்புஉணர்த்தியது,
கருவறையில் சுமந்ததுபோதாதென
உயிருள்ளவரை
மனதில் சுமப்பாளென!

எழுதியவர் : Sara Tamil (21-Jun-19, 11:09 pm)
சேர்த்தது : Sara Tamil
Tanglish : muthal azhukai
பார்வை : 202

மேலே