வேண்டுதல்

தண்ணீருக்காக அலையும் மக்கள்
பருவம் ஒன்று தவறியது.. மழை இல்லை
வெடித்து, வறண்டு காணும் பூமி
இந்த ஆண்டும் பருவம் மழை தாராது போயின்..............
செய்வதறியாது ஏதேதோ பேசி மக்களுக்கு
ஆறுதல் சொல்ல பார்க்கும் சிலர்!
மக்கள் வேண்டுவது குடி நீர் ...
இறுதியில் எல்லோரும் நாடினர் ஆண்டவனை,
என்றுமில்லா கூட்டம் கோயில்களில்
மழைவேண்டி ஹோமங்கள், யாகங்கள்
கட்சி தலைவர்கள் தலைமையில் ....
யாகப்புகை வானை முற்றுகை இட,
தேவாலயத்தில் கூடி இருக்கும் சிலர்
தேவனிடம் கோரிக்கை மழைக்காக,
தேவன் கோயிலில் மணியோசை ...
மசூதியில் தொழுகையில் ஏராள மக்கள்
ஆண்டவனிடம் மழைக் கோரி வேண்டுதல்...
இரவில் தெருக்களில் பஜனை
இறைவன் நாமத்தை மழைக்குரிய
ராகத்தில் பரவசமாய்ப் பாடி .....

சுகமாய் வாழ்ந்த மக்கள் .....
நெருக்கடியில் இறைவனை நாடினர்
விடிவு காண......
நம்பிக்கை நலந்தரும் கூட்டு நம்பிக்கை
நிச்சயமாய்.....

இருண்டது வானம், கூடியது கருமேகம்
அட மழை எங்கும்.....
நனைந்தது பூமி நனைந்தது மனிதர் உள்ளம்
அடங்கியது தாகம்,
நதிகளில் நீரோட்டம் , ஓடைகளில், அருவிகளில்
பூமியில் புத்துணர்வுபெற்ற உயிரோட்டம்
எங்கும் மகிழ்ச்சி....தண்ணீர் தந்தான்
ஆண்டவன்.....
அது சரி, எந்த ஆண்டவன்?... யார் பூஜை
எந்த ராக இசைக்கு மயங்கினான் இறைவன்?
எந்த மதம் கொணர்ந்தது மழையை ?
இதற்கு பதில் .....ஒன்றே ஒன்று...
மனிதர்கள் ஆண்டவனிடம் கொண்ட அந்த
நம்பிக்கை ஒன்றுதான் .....
அது 'அவனை' அடைந்தது, வழிகள்
பலவாய் இருந்தும் .......
, நதிகள் பலவாய் இருப்பினும் சேருவது
கடலை, அதுபோல் வேண்டுதல் பல பல,
மதங்கள் பல பல, இறைவன் ஒருவனே...
'அவன்' காதில் வேண்டுதல் விழுந்தது
மழையும் வந்தது....

எங்கும் வேண்டிய நீர், பூமிக்கு
வேண்டிய அளவு மழை ...

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-Jun-19, 11:49 am)
Tanglish : venduthal
பார்வை : 105

மேலே