கடவுள் பயம் தேவை

கடவுள் பார்க்கின்றார்....

பணத்தைப் பார்க்கும்
உலகம்
பண்பைப்
பார்ப்பதில்லை.....

குடிசையைப் பார்க்கும்
உலகம்
குணத்தைப்
பார்ப்பதில்லை.....

அழகைப் பார்க்கும்
உலகம்
அன்பைப்
பார்ப்பதில்லை.....

உன்னைப் பார்க்கும்
உலகம்
உன் உள்ளத்தைப்
பார்ப்பதில்லை.....

வசதியை விரும்பும்
உலகம்
வாழ்க்கை வரலாற்றைப்
பார்ப்பதில்லை...

கவலைகளைப் பார்க்கும்
உலகம்
கடவுளைப்
பார்ப்பதில்லை.....

எதிர்பார்க்கும் உலகம்
ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ள
விரும்புவதில்லை....

உலகம் பார்க்காத
உன்னைப் பற்றிய
உண்மைகளை.....

உன்னைப் படைத்த
கடவுள் மட்டுமே
பார்க்கின்றார்..

உன் வாழ்க்கை
வரலாற்றைப் படிக்கின்றார்.

கடவுள் பார்க்கும் நீ
கடவுளுக்குப் பயந்து
கடவுளின் பிள்ளையாக
வாழ
வாழ்த்தும்
வாழ்த்துக்களுடன்
கடவுளின் பிள்ளை
ஆ.கிருஷ்ணவேணி.

எழுதியவர் : ஆ.கிருஷ்ணவேணி (24-Jun-19, 1:30 pm)
பார்வை : 113
மேலே