திமிங்கலம்
விண்மீன்கள் பிடித்து
உள்ளங்கையில் அடைத்து
கானல்நீரில் கவனமாய்
நீந்தவிட்டேன்!!!!
.
துல்லியமான புருவங்களை
தூண்டிலாக கொண்டு
என் கற்பனை மீனை
களவாடிப் போகிறாய்!!
.
திமிரான திமிங்கலம் நான்
சிறு தூண்டிலாக நீ
என்ன செய்யமுடியுமென்றேன்??
இதழாழே வலைவிரித்தாய்
சிரிப்பாலே சிறைப்பிடித்தாய்!!!
......ரூபன் புவியன்.....