மாசில்லா தங்கம்

தங்க குவியல் கிடைச்சதும்
திங்க சோறும் மறந்துடுச்சு - குபேரனும்
கெஞ்சும் நிலை வருமுன்னு
நெஞ்சம் எல்லாம் நிறைஞ்சுடுச்சு - பொன்னால
பட்டணம் செய்யலாமா
பட்ஷன பாத்திரம் செய்யலாமா - இப்படி
சொப்பனம் பற்பல கண்டதுண்டு
சொர்னம் என்க்கிட்ட இருக்குதுனு - ஆனாலும்
வளவி கூட செய்ய முடியல
வளைஞ்சு குடுக்காத தங்கத்தால - அதுக்காக
மாசு சேர்த்து வசியம் பன்ன
மனசு கேக்கல நெஜமாவே - என்க்கிட்ட
சுத்தமான பொன்னுண்டு
சுகந்த வாழ்வுண்டு! அதுபோதும்