வேக வாழ்விலே

அறமது செய்ய விரும்பெனவே
அன்றே அவ்வை சொன்னதெல்லாம்
மறந்தே விட்டார் மக்களெலாம்
மாறி விட்டார் முற்றிலுமாய்,
துறந்தவர் கூடத் தூயரில்லை
தீய வழியே தேடுகின்றார்,
பறந்திடும் வேக வாழ்க்கையிலே
பண்புக் கிங்கே இடமிலையே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (4-Jul-19, 6:52 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : vega vazhvilae
பார்வை : 106

மேலே