உனக்காக எங்கும் நான் வருவேன்

மேலோக வழி எது
விழியில் காட்டுங்கள்
வலியோடு வந்திருக்கிறேன்
என் நண்பனைத் தேடி. ......///////

என்னைக் கண்டவுடன்
எழுந்து வருவான்
கால் வழுக்கி விழாமல்
தரையைத் துடைத்து விடுங்கள் ........./////

நேரில் கண்டதில்லை
ஆவளோடு வருவான்
அவசர நடை போட்டு ..........////////

வண்ண வண்ண
மாலையோடு போவதாக
கூறி புகைப்படம்
போட்டார்களே
கழட்டி விட்டானா ?கூறுங்கள் ...../////

என் மேல் அவனுக்கு
அதிகமாகவே பிரியம்
அதை மறைத்தே
வைத்திருந்தான் ........///////

இப்போது பாருங்கள்
சிரித்த படியே வருவான்
அவன் மேனியிலே
அதிக வாசனையோடு
வந்தானாமே அதன் வாசனை
குறைந்து விட்டனவா
எனக்கு அந்த வாசனை
கொஞ்சம் அலர்ச்சி ........//////

கண்டதும் என்ன
சொல்வான் எங்கே
நான் போனாலும்
தொடர்ந்து வந்து விடுவாயா ?
என்று முன் பாதி
வார்த்தை திட்டுவான்
பின் பாதி வார்த்தை
அன்பைக் கொட்டுவான் ........////

உன் தொல்லை இல்லாமல்
நான் இருக்கிறேன் நீ போய் விடு
என்று செல்லமாக விரட்டுவான் .....//////

அவன் மனசில் எனக்கும்
ஓர் இடம் உண்டு என்று ஒப்புக்கொள்ளவேயில்லையே
வழி காட்டியே இன்று வரை
ஆனால் என் மேல்
பிரியமானவந் தான் அவன் ........./////

கொஞ்சம் எட்டி பாருங்கள்
கையில் புத்தகத்தோடு
இருந்தால் விட்டு விடுங்கள்
நான் காத்திருப்பேன்
காத்திருந்து பழக்கப்பட்டவள் தான் .....///

அவனை வழி அனுப்பும்
போது அவனுக்கு
பிடித்தவைகளைக் கொடுங்கள் என்றார்களாம் யாரோ
உடனே அவனின் நண்பர்களின்
ஒருவன் நிறையப் புத்தகங்களைக்
கொண்டு கொடுத்தானாம்
அவனுக்கு இவைகள் மேல்
மோகம் என்று சொன்ன படியே....../////

நான் பின்பு அறிந்தேன்
எனக்கும் தெரியும்
பசி மறந்து படிப்பான்
சுவையோடு கதையைச்
சொல்லி முடிப்பான் .........////

அவனை பிடித்தவர்கள்
யாராவது கூடவே
துணைக்குப் போங்கள்
என்று யாருமே சொல்ல வில்லை
நானே வந்து விட்டேன் .........////

அவனுக்கும் இவை தெரியாது
கடும் கோபம் கொள்வான்
ஆனால் கருணையோடு
கிட்ட வருவான் சென்று
பாருங்கள் வழி காட்டியரே
பல மாசமாச்சு அவனோடு பேசி
காத்திருக்க முடிய வில்லை
ஊற்றெடுக்கிறது அதிகமாகவே பேச்சு..../////

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (4-Jul-19, 8:07 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 242

மேலே