ஏக்கம்

செப்பு வைத்து விளையாடிய
சிறுவர் சிறுமி யெல்லோரும்
ஒப்பனை செய்த பொம்மைகளுடன்
ஒன்றாய்ச் சேர்ந்தே ஆடியதெலாம்
இப்போ திங்கே நடப்பதில்லை
இவர்கள் கைகளில் தொடுதிரையே,
எப்போ திவர்கள் நமைத்தொடுவார்
ஏங்கித் தவிக்கும் பொம்மைகளே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (5-Jul-19, 7:20 am)
Tanglish : aekkam
பார்வை : 393

மேலே