பிள்ளை நிலா பருவ நிலா

நேற்று நீ பிள்ளை நிலவாய் கிள்ளை மொழி
பேசி கொஞ்சி குலாவி என் மடியில் தவழ்ந்து
பசித்திட முட்ட முட்ட பால் குடித்து பின்
thookkam கண்களைத் தழுவ தாலாட்டு paattil
துயில் கொண்டாய் அதைக் கண்டு களித்து
நானும் உன்னோடு சேர்ந்து தூங்கியது
இன்னும் பசுமையாய் என் நினைவில்…………..

இன்று கண்ணே என் penne நீ பருவத்தில்
அழகின் உருவாய் சிரித்து மகிழ்ந்து
அன்பு மொழி பேசி அம்மா அம்மா என்று
கொஞ்சி உன் அன்பு சேர்த்து என் அன்பிற்கு
என் மடியில் ஆசையாய் தலை வைத்து
கொஞ்சுகிறாய் ஆயிரம் கதைகள் சொல்லி ,
' அம்மா உன் மடியில் துயில் கொள்ள ஆசை
கொஞ்சம் துயில் கொள்ளலாமா' என்று
கேட்டு முடிக்கும் முன் கண்மூடி தூங்கியும்
விட்டாய் என் கண்மணியே.... தூக்கத்தில்
கனவுலகு சென்று விட்டாயோ பருவம்
செய்யும் மாயத்தால் நீ கண்ட காதலுனுடன்
கொஞ்சி உறவாடி ஏதேதோ காதல் மொழி
பேசி சிரிக்கிறாய் , அத்தனையும் உன்
தூக்கத்தின் பிதற்றல்கள்… உன்னை நான்
புரிந்துகொண்டேனடி என் குழந்தாய் ….
இது பருவம் தரும் கள்ள காதல் என்றால்
அதில் தவறேதும் இல்லையடி அவன்
நல்லவனாய் உனக்கேற்றவனாய் இருந்தால்
thaai நான் உனக்கு இருப்பேன் உன் வாழ்வு
வளமாக சீராக அமைந்திட கலங்காதே பெண்ணே
என்று என் மனதுக்குள் சொல்லி மடியில்
உறங்கியவளை மஞ்சத்தில் படுக்க விட்டேன்
அந்த எந்தன் பருவ நிலாப்பெண்ணை .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (5-Jul-19, 7:21 am)
பார்வை : 61

மேலே