மியா லோள்
அதிர்ஷ்டக்காரன்டா பேரா நீ புண்ணியம் செய்தவள் உன் மனைவி
முதல் குழந்தைப் பேறே இரட்டைக் குழந்தைகள்
இரண்டும் மகா இலட்சுமிகள்!
கொடுத்து வைத்த கோமகன்டா நீ
அவர்களுக்குச் சூட்ட வேண்டும்
அருமையான பிறமொழிப் பெயர்களை
தமிழ்ப் பெயர்களைப் பிள்ளைகளுக்கு
வைப்பது காலத்திற்கு ஏற்றதல்ல.
ஊர் மக்கள் எவ்வழி அவ்வழியே நம் வழி.
நீயும் உன் மனைவி மங்கையும் குழந்தைகளுக்குச் சூட்டும் பெயர்களைத் தேர்ந்தெடுத்து விட்டீர்களா?
பாட்டி, பாட்டி. பெயர்ஞானிப் பாட்டி
ஒரு பெண் குழந்தைக்கு 'மியா' என்ற பெயரைச் சூட்ட இருவருக்கும் சம்மதம்.
இன்னொரு பெண் குழந்தைக்கு பெயர்ஞானியான நீங்கள் தான் பிறமொழிப் பெயரொன்றைச் சூட்டவேண்டும்.
ஆகட்டும்டா பேரா அறிவழகா
பிறமொழிப் பெயர்களுக்கா பஞ்சம்?
என்னிடம் நீ அடைந்நாய் தஞ்சம்!
இரண்டாது மகளும் எஞ் செவ்லப் பேத்திதானே.
அவளுக்கு வையடா அறிவழகா 'லொள்' என்ற அழகான பெயரை!
பெயரின் பொருள் என்னவென்று மட்டும் என்னிடம் கேட்காதே
பொருள் தெரியாப் பெயர்களையே பள்ளி ஆசிரியர்கள் முதல் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் வரை 'சுவீட் நேம், சுவீட் நேய்ம்' என்று பாராட்டி மகிழ்வர்.
புரிந்ததா பேரா பொற்பனை அறிவழகா?
■■■■■■◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆■■■■■■■■■■■■■■
Mia = beloved. English, Danish, Indian orogin.
LOL = used to draw attention to a joke or amusing statement or to express amusement.
"I love how you said 'Coffee is not my cup of tea'. LOL!"