மொட்டுக்கள் கண்ணடித்துக் கொண்டன

பூக்களைப் பறிக்காதே போர்டை
நட்டுவிட்டுச் சென்றான் தோட்ட்டக்காரன் !
அவள் வரும்போது பறித்துச் செல்ல வேண்டுமென்று
மலர்ந்த பூக்கள் எல்லாம் காற்றிடம் ஓர் உதவி கேட்டது !
காற்று வீசிய வீச்சில் போர்டு குப்புற கீழே வீழ்ந்தது !
அவள் வந்தாள்
பூக்களைப் பறித்து அள்ளிச் சென்றாள்
மீண்டும் வந்த தோட்டக்காரன் விழுந்து கிடந்த போர்டை
மறுபடியும் நட்டான் !
மலரும் மொட்டுக்கள் எல்லாம் ஒன்றை ஓன்று
கண்ணடித்துக் கொண்டன !

எழுதியவர் : கவின் சாரலன் (6-Jul-19, 10:00 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 107

மேலே