வரமொன்று தாராயோ

கண்ணோடு ஈரம் தராமல்
நெஞ்சோடு ஈரம் தந்து
என்னவளே வருவாயா?

உன்னோடு சேராமல்
மண்ணோடு வாழாது
காற்றோடு கலந்திடுவேனே!

காற்றோடு கலந்தாலும்
பிரிவினை ஏற்காது
உன்மூச்சோடு சேர்ந்திருக்க
வரமொன்று தாராயோ?

எழுதியவர் : பசுபதி (13-Jul-19, 5:56 pm)
பார்வை : 217

மேலே