வரமொன்று தருவாயா
அன்பே
கருவறையிலிருந்து விடுமுறை எடுத்து
கண்களை திறந்த நாள்முதலாய்
கண்ணெதிரே எத்தனையோ
காட்சிகள் உறவென்று என்முன் நடமாடியது
விவரம் தெரிந்த நாள்முதலாய்
விடுமறை இல்லாமலும்
விதிமுறை இல்லாமலும்
உன் விரல் பிடித்தே விளையாடினேன்...
அருகில் நீ இருந்தாலும்
தொலைவில் நான் இருந்தாலும்
தொட்டுப் பேசியே
தொடர்வண்டியாய் நம் உறவு வளர்ந்தது!!
ரகசியம் என்ற ஒன்று
நம்முள் அவசியமாற்றதாக
இருந்து வந்தது
ஒளிவு மறைவு இல்லாத
நம் வாழ்வில் ஏதோ ஒன்றை
கற்றுக்ஙொடுக்கவே
வயது என்ற ஒன்று
வளர்ந்துக்கொண்டே வந்தது -- அது
வாலிபத்தை கடக்க நின்றது!!
பூக்களை நான் ரசித்த நிலைமாறி
பூக்கள் என்னை ரசிக்கும்
நிலைக்கு வந்தேன்...
என்னுள் நாணம் எட்டிப்பார்க்க
ஏகாந்தத்தோடு போட்டிப்போட்டேன்...
வெளியில் வந்து வெளிச்சத்தை பார்க்கவே
பல வேளிகளை கடக்க வேண்டியிருந்தது
பூவின் மணம் காக்கும் காற்றாக
என்னை எனக்கே
காவல் காக்க வைத்தார்கள்!!
கவனமென்ற வார்த்தை
கவசமாகவே அடிக்கடி
காதுக்குள் விழுந்தது...
பல விடியல்களை முடிந்த பின்பு
முகம் காட்டி வெளியே வந்தேன்...
நட்பின் நிழல் நீயட
நம்பிக்கையின் துணையும் நீயட
வீதிக்கு வந்தவுடன்
விரல் பிடித்து நடக்கும்
உன்னை தேடினன்!
எட்டாத தொலைவால்
நீ எங்கோ சென்றிருநாதாய்!!
இரவு வரும்வரை
காத்திருக்கும் நிலவாக
நீ வரும்வரை காத்திருந்தேன்...
காத்திருந்த அந்த காலங்களில் தான்
சில உண்மைகளை
உணரத்தொடங்கினேன்!
திரும்பும் திசையெல்லாம்
உன்னைத் தேடிக்கொண்டே
நான் என்னைத் தொலைத்தேன்!
தொலைந்தது நான் மட்டுமல்ல
என் உறவும் தான்!!
உன் நினைவிலே
நான் நாளெல்லாம் நிலைக்குலைந்தேன்!
நீருக்கும் நெருப்புக்கும்
என்ன உறவென்று எண்ணி தவித்தேன்!!
காலங்கள் கடந்த பிறகு
ஒருநாளில் கண்முன் தென்பட்டாய்...
என் கண்களெல்லாம் வெட்கம்!
முதன் உனை பார்க்க முடியாமல்
பரவசத்தில் பரிதவித்தேன்!!
நானென்று நானில்லாமல்
நாணத்தை பூசி
தலைகுணிந்து நின்றேன்!!
என்ன நடந்தது என்னுள்
எதைக் கண்டேன் உன்னிள்
எதுவும் புரியவில்லை....
விரல்நகம் கடித்தே
பல விடியல்களை கழித்தேன்...
விருப்பத்தை சொல்லாமலே
வருத்தத்தில் விழுந்தேன்!!
வழக்கம் போல் நீ அழைக்க
உன்ன வந்துப்பார்க்க
தயக்கம் கொண்டேன்
முகத்தோடு முகம் நின்று பார்க்க
மூச்சுக் காற்று தடையாய் நின்றது!!
உரிமைகளை உனக்கென கொடுத்தாலும்
உணர்வுகளை காட்ட முடியாமல்
உள்ளுக்குள் தவித்தேன்!
காதலை சொல்ல முடியாமல்
கதறி அழுதேன்!!
கண்களோடு சந்தித்த அந்நாளில்
விரல்களை பிடித்து
உன்மேல் விருப்பமென்றேன் -- "நீயோ"
ஊடல் கொண்டு உறவாட வெறுத்தாய்!!
என்னவனே
என்னட நான்
தவறு செய்தேன்?
நிஜமாக நீ இருந்தவரை
நானாகத்தான் நானிருந்தேன்!
இருளின் நிழலாக
நீ தொலைந்து போக -- அன்றுமுதல்
நினைவுகளை சேமித்து வைத்தேன்!!
நினைவுகளை சேமித்த நாள்முதலாய்
என் நெஞ்சின் ஓரத்தில்
உனக்கு அடைக்காலம் கொடுத்தேன்!
முந்தானை மறைவில்
அதை மூடி மறைத்தேன்!!
எங்கே நீ சென்றாய் என்றே
எந்நேரமும் தேடி அலைந்தேன்!
தேடி அலைந்தாலும் தேவையின்றி
உன்னுள் ஓடிய ஓளியவே
விருப்பம் கொண்டேன்!!
பருவங்கள் என்னை
சூழ்ந்து நிற்க
உந்தன் பார்வையின்றி
பாலைவனமாய் வறண்டு நின்றேன்
ஆசைகள் என்னை அலச
உன் மீசைகளை உரச
மோகம் வளர்ந்தது
தனியறையில் படுத்தே
தாபம் கொண்டேன்...
தாபம் கொண்டு தவித்தாலும்
தனியாத மோகம்
எனக்கு துணையாக வந்தது!!
மோகத்தோடு கைக்கோர்த்தவள்
முகம் பாராக்காமலே
மூச்சுக் காற்றை வெறுத்தேன்....
மூச்சுக் காற்றுக்கு
பதிலில்லாமல் இருந்த போதுதான்
வேண்டிய வரமாக
நீ வந்து நின்றாய்!!
உன்னை நினைக்கும்போதெல்லாம்
புதுமழை சாரல் புதிராய்
என்மேல் வீசியது...
அதுவரையில்
நட்பில் நனைந்தவள் -- அன்றுமுதல்
உந்தன் அன்பில் நனைந்தேன்!! நீயோ
அனலாய் ஒதுங்கி நின்றாய்!!
நீ தூரமாய் நின்றதாலே
என் துயரங்கள் அதிகரித்தது
புன்னகை வீசாமல் நீ போக
புண்பட்டே நான் அழுதேன்
காதலை ஏற்காமல் நீ போக
கண்ணீரிலே கடலாக நான் மிதந்தேன்
ஒதுங்கி ஒதுங்கீ நீ போக
ஓரப்பார்வை கேட்டு நான் ஒடுங்கினேன்
என்னை விட்டு மற்றவரிடம் நீ பேச
பார்த்தே நான் ஏங்கினேன்
என்னவனே
ஏனட எந்நிலை உனக்கு
புரியாமல் போகிறது?
உந்தன் தோள்மீது தானே
நான் தோழியாக தலைசாய்ந்தேன்!
கண்ணியம் காக்கும் உன்மீது
என் காதல் பூர்த்தது!!
உள்ளம் கவர்ந்த உன்மேல்
காதல் வந்தது தவறென்றா என்னை
தவிக்க விட்டு வேடிக்கை பார்க்கிறாய்...
தலைவியாய் உன்மேல் தலைசாய
சம்மதம் கேட்கிறேன் -- நீ
தள்ளி நின்றே சாகடிக்கிறாய்!!
பொதுவாக எல்லாம் பேசவே
மெதுவாய் அழைக்கிறேன்
நீ அனுமதி தர மறுக்கிறாய்!!
என்னவனே
என்னிடம் நின்றுபேச நேரமில்லயா
நிமிர்ந்து பார்க்க அசையில்லையா
கனிந்து பேச காலமில்லையா
உள்ளத்தை கொடுக்க உரிமையில்லையா
என் உணர்வுகள் எல்லாம்
தீயாக எரிந்தாலும் திரும்பி "நீ"
பார்க்க மாட்டாயா...
நட்பாக
உன் நிழலில் வாழ்ந்தவளுக்கு
நாளெல்லாம் உன் நம்மிக்கையால் இணைய
உந்தன் இதயத்தில் வரமொன்று தருவாயா...!!