ஏன் இந்த ஏமாற்றம்

சிரித்த முகமோ செவ்வந்தி /
சிந்துகிறாள் புன்னகையை வசந்தி/
சிந்தனையில் அவள் காந்தி /
தேடிடுவாள் தினமும் மனச் சாந்தி/
சித்திரைப்பாவையின்
சிறு கன்னத்திலே/
பிரமன் மச்சத்தால் முத்திரை பதிக்க/
மிச்சம் மீதி இடத்தினிலே /
இச்சு இட்டு நான் செங்கனி சுவைக்க/
நித்திரை இமைக்குள்ளே/
சொப்பனத்தில் பாவை அவள் சிரிக்க/
வந்தவை கனவு என்னும் /
புரிதல் இல்லாத வாலிபப்
பருவம் எழுந்து குதிக்க/
பக்க வாட்டினிலே உறங்கிய
நண்பன் திரு திருவென முழிக்க/
பல்லைக் காட்டி நான் வெட்கம்
கொண்ட படியே இழிக்க/
கறுமம் கறுமம் என்ற வாறு
அவன் தன் தலையில் அடிக்க/
தூக்கம் என்னை விட்டு
வெகு தொலைவில் பறக்க/
தூங்கா விழியோடு ஆழ்
மனதில் நான் அவளை நினைக்க/
தெளிந்த காலைப் பொழுதும் பிறக்க/
தேவதை அவள் வருவாள்
முற்றத்தில் நீர் தெளிக்க/
என்னும் எண்ணத்தில் விரைந்து
சென்று நானோ காத்திருக்க /
கதவை திறந்து வந்து எட்டிப்
பார்த்ததோ அவளின் அப்பன் மொக்க/