மரமும் மனிதமும்
கனியின் கருவான விதை
மண்ணில் புதையுண்டது
அருவியாக மழை பொழிந்திட
விழும் தூரலின் தீண்டலில்
விதை பருவம் எய்திட
வருசங்கள் கடந்து விருட்சமானது
பொய்யே சொல்லாத
விறகுவெட்டியான்
கோடாளியால் அழகாக
பொய் சொல்கின்றான்
மரமே!!!
வலியே இல்லாமல்
உன்னை வெட்டுகிறேனெ'ன்று
வலி திண்ற விருட்சம்
இதமாக சாபமிட்டது
அற்ப மனிதா
இந்த பூவுலகில்
நீரின்றி உலகமும்
மரமின்றி மனிதமும்
நிலைத்து நிற்காது
குருதி வற்றிய நரம்புகளாய்
ஆறுகள் பாலைவனமாகுமே
சிறகு இல்லா பறவையாக
மனிதனும் ஒடிந்து போவானே
ஆறறிவு மனிதா
நிஜத்தை நீயறிவாய்
நான் விடும் மூச்சு உன்னுள்
நீ விடும் மூச்சு என்னுள்
பரிமாறிக் கொள்ளும்
சுவாசத்தால்
உயிர் பிணைப்பின்
வசத்தால்
ஒரு தாய் பிள்ளைகள்
நாம் அல்லவா
உடலின்றி உயிரும்
உயிரின்றி உடலும்
தனித்து வாழுமா
நீயென்னை வளர்த்தால்
இயற்கை அன்னை
உன்னை வளர்ப்பாள்
இனி மரம் வளர்ப்பாய்
மனிதத்தை உயிர்ப்பிப்பாய்