நினைவுகளே

மலர்கள் மலர்ந்தால் மணம்வீசி
மனதில் இன்பம் நிறைத்துவிடும்,
மலரும் இளமை நினைவுகளில்
மயக்க வைத்த இன்பமதும்
கலக்கம் தந்திடும் துன்பங்களும்
கலந்தே காட்டிடக் காண்பாயே,
நலந்தரும் இன்பம் நிலைக்கட்டும்
நசுக்கிய துன்பம் மறப்பாயே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (14-Jul-19, 7:24 am)
Tanglish : ninaivukale
பார்வை : 461

மேலே