சமய சஞ்சீவி தானே

பேரரசன் நான்
பெரியவனா?—இல்லை
புவியாளும் இறைவன்
பெரியவனா? என்று கேட்டு
அதற்குரிய காரணத்தையும்
சொல்லும்படிக் கூறினார்
அந்த மொகலாயப் பேரரசர்
தனது அரசவையில்

பீர்பால் என்னும் அறிஞர்
பதிலளிக்கும் விதமாக
“அரசே
அண்ட சராசரமும்
இறைவனுடையதாய் இருப்பதால்
ஈசன் தனது எல்லையை விட்டு
எந்த ஒரு மனிதனையும்
நாடு கடத்த இயலாது

ஆனால் தாங்களோ
உங்களுக்கு பிடிக்காதவனை
வெகு எளிதில்
நாடு கடத்தி விடுகிறீர்கள்,
அதனால் நீங்கள் தான்
இறைவனைவிட பெரியவர்”என்றார்
சமயத்துக்கேற்ற புத்தி
சமய சஞ்சீவி தானே!

எழுதியவர் : கோ. கணபதி. (14-Jul-19, 8:48 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 16

மேலே