கண்ணில் கரைந்த கருவாச்சி

கண்ணே.....
.
கண்ணில் கரைந்த
கருவாச்சியே உன்னை
கவிதையால் வார்க்க
கங்கனம் கட்டினேன்....
.
கங்கையென கவிதை
கரைபுரண்டு வந்ததும்
கடுகளவு காதலை
கடலளவாய் கொட்டினேன்.
.
கற்பனை காணாமல்
கடந்து தவிக்கிறேன்....
கரையும் நேரத்தை
கடத்தத் துடிக்கிறேன்...
.
கட்டைவிரல் கனையாழியாய்
கட்டிக்கொள் அன்பே....
கபாலம் திறந்து
கபடியாட காத்திருக்கிறேன்!!
.
கபடி கபடியென
கதைத்தவாறே
கவிதையில் நித்தம்
களிக்க பூத்திருக்கிறேன்!!!
.
கண்ணே உன்னை
கவர்ந்திழுக்க இந்த
கவிஞன் அவதாரம் போதாதடி!!
.
கரும்பே உன்னை
களவாட இனி
கயவன் அவதாரம் எடுப்பேனடி!!
.
........ரூபன் புவியன்......

எழுதியவர் : Ruban puviyan (14-Jul-19, 10:00 am)
சேர்த்தது : Ruban puviyan
பார்வை : 374

மேலே