காதல் வலி 71
மஞ்சள் பூசிய தேவதை
மாலை மஞ்சள் நிறம்
காரணம்
ஒரு மாலை
நேரத்தில்தான்
அவள் மஞ்சள்
பூசியிருக்க வேண்டும்
மழை பெய்யாத
விவசாயி நிலத்தில்
அன்று
மஞ்சள் மட்டும்
பூமியைப் பிளந்து
விளைச்சல் கண்டது
சிவப்பு நிறப் பூக்களெல்லாம்
பூஜைக்கு செல்லும் போது
மஞ்சள் நிறப் பூக்கள் மட்டும்
அந்த ஏஞ்சல் கருங்கூந்தலில்
ஊஞ்சல் ஆடச் சென்றது
ஆம்
அன்றுதான்
அவளுக்கு
மஞ்சள் நீராட்டுவிழா
அவள்
இந்தியாவில்
மஞ்சள் பூசி ஓடும்
மஞ்சள் ஆறு
இவளைப் பார்த்தாலே
போதும் வேண்டாம் சோறு
இவள்
மஞ்சள் பூசும்போது
உண்மையில்
மஞ்சள்தான் இவளைப்
பூசிக்கொள்கிறது
எலுமிச்சையில்
சிறு பாகம்
காலைச் சூரியனில்
சிறு பாகம்
மஞ்சள் நதியில்
சிறு பாகம்
இவையே இவளின்
பாதம்
அது பாதமல்ல பாதமல்ல
பார்த்தாலே சத்து தரும்
பாதாம்
இவள் மஞ்சளை
அரைப்பது அம்மி
மஞ்சள் பூசியதும்
இவள்தான் உலக
அழகிகளுக்கெல்லாம் மம்மி
இவளின்
மஞ்சள் அழகைக்
கண்டிருந்தால்
தொல்காப்பியர்
தொல்காப்பியம் எழுதாது
இவளின்
தோல் காப்பியம்
எழுதியிருப்பார்