பயம்னு பேரா
'பயம்'னு பேரா?
■■■■■■■■■■
ஏன்டா கறுப்பையா உம் பேரனுக்கு மவன் பொறந்திருக்கிறானாமே?
@@@@
ஆமாம் அக்கா. ஆஸ்திரேலியாவில வேலை பாக்கிற எம் பேரன் குமார் மனைவி கம்லாவுக்கு மொதல் பிரசவம். ஆண் கொழந்தை பொறந்திருக்கு.
@@@@@
சரிடா கறுப்பையா, கொழந்தைக்குப் பேரு வச்சுட்டாங்களா?
@@@@@
உம். வச்சுட்டாங்களாம்.
@@@@@
எங் கொள்ளுப் பேரனுக்கு 'பயம்'ன்னு பேரு வச்சிருக்கிறாங்களாம்.
@@@@@@
என்ன பேருடா இது? காலம் பூரா அந்தப் பயந்துட்டே கெடக்கணும்னா பெத்த புள்ளைக்கு 'பயம்'னு பேரு வச்சிருக்கிறாங்க? இல்ல இந்தப் 'பயம்' சென்னைப் 'பயமா'?
@@@@@@@
அதென்னமோ நான் என்னத்தக் கண்டேன். எம் பையனுக்கு அழகான தமிழ்ப் பேரா 'தமிழழகன்'ன்னு பேரு வச்சேன். அவன் தன் மகனுக்கு 'குமார்'னு இந்திப் பேர வச்சுட்டான். நம்ம பட்டிக்காட்டு ஊர்ல அம்பது வயிசுக்கும் கீழ உள்ளவங்க பேருங்கெல்லாம் இந்திப் பேருங்கதான். பட்டணத்தில, வெளிநாட்டில வாழற தமிழருங்க அவுங்க பெத்த பிள்ளைங்களுக்கு நூத்துக்கு நூறு இந்திப் பேருங்களத்தான் வைக்கிறாங்க.
@@@@@
இந்திப் பேரை புள்ளைங்களுக்கு வைக்கிறவங்க கலப்படத் தமிழப் பேசித் தமிழைச் சீரழிக்கறதைவிட இந்தில பேசிக்க வேண்டியதுதானே?
@@@##
நாம என்னக்க சொல்ல முடியும். அவுங்க விருப்பம்.
@@@@@
ஆமாம்டா கறுப்பையா.
■■■■◆◆◆■◆◆■■■■■■■■■■■■■■■■■■■■◆■■■■◆◆◆◆◆◆
Payam = message. Iranian, Indian origin.
Kumar = small boy/prince
Kamla = lotus