அவள் கண்கள்
கண்ணே கண்மணியே உன் கண்ணின்
அழகில் மயங்கி நான்
எப்படி சொல்வேன் என்று தெரியாமல் இருக்க
கண்ணே உன் விழியின் திரை வெள்ளை
விளிசங்காய் காட்சிதர , அதில் கரிய
உன் கண்மணிகள் மதுவுண்டு துள்ளும்
கருவண்டுகள் என்பேன் நான்
மூடி திறக்கும் இமைகள் கண்ணில் அமர்ந்த
பட்டாம்பூச்சிகளோ …...அதன்மேல் கோட்டையின்
அகழிப்போல் வில்லாய் வடிவமைந்த புருவங்கள்
இத்தகைய உன் கண்களின் அழகை எண்ணி எண்ணி
வியந்து நின்றேன் நான் …… நீ மனமிரங்கி
என்மீது பார்வையும் தந்தாய் …. அதில்
நான் கண்டதெல்லாம் காவியமாய் ஆனதடி
அதில் நான் கண்ட அன்பு, காமம், பண்பு வெட்கம்
மருட்சி என்று சொல்லிக்கொண்டே போகலாம் ……
நயனக்காப்பியம் என்ற தலைப்பில் கண்ணே