இனியென்ன நான்சொல்ல.......

நான் தேடும் பூவெல்லாம்
வாசங்கள் சேர்க்காது,
வாசங்கள் சேர்த்தாலும்
என்வாழ்க்கை சேராது.

எப்போது எங்கேயும்
என்தேடல் நிற்காது.
எல்லோர்க்கும் என்செய்கை
என்றென்றும் பிடிக்காது.

நான்வைத்த கால்தடங்கள்
யாரோடும் போகாது.
இனியென்ன நான்சொல்ல
கேட்பார்கள் இல்லாது.

எழுதியவர் : வென்றான் (7-Sep-11, 2:11 pm)
சேர்த்தது : வாகை வென்றான்
பார்வை : 412

மேலே