தீர்ப்புரையைத் தமிழில் தந்திடுக கவிஞர் இரா இரவி

தீர்ப்புரையைத் தமிழில் தந்திடுக!

கவிஞர் இரா. இரவி.

******

எட்டு மொழிகளில் தீர்ப்பு வழங்கியவர்கள்
எட்டுத்திசையும் ஒலிக்கும் தமிழில் வழங்குங்கள்!தமிழில் இருந்து பிறந்த மொழிகளில் வழங்குகையில்
தமிழில் வழங்குவதில் என்ன இடர்பாடு உள்ளது!மொழிமாற்றம் செய்திட அறிஞர்கள் உள்ளனர்
முதலில் தமிழில் தீர்ப்பை வழங்கிட வாருங்கள்!உலகின் முதல்மொழியை புறக்கணிப்பது சரியா?
உடன் அறிவியுங்கள் தமிழிலும் தீர்ப்பை!உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழில் வழங்கினால்
உணர முடியும் தமிழர்களால் தீர்ப்புகளை!வெள்ளையன் ஆண்டபோது அச்சிட்ட பணத்தில்
வண்டமிழ் இடம்பெற்றதை அறிந்திடுங்கள்!இங்கிலாந்துக்காரனுக்கு புரிந்தது தமிழின் அருமை
இந்திக்காரர்களுக்கு புரியவில்லை தமிழின் அருமை!பல நாடுகளில் ஆட்சிமொழி தமிழ் அறிந்திடுங்கள்
பண்டைத்தமிழுக்கு முன்னுரிமை வழங்குடுங்கள்!தமிழ் மீது என்ன வெறுப்பு உங்களுக்கு
தமிழைத் தள்ளி வைப்பது தமிழருக்கு இழுக்கு!சேய் மொழிகளுக்கு தரும் முக்கியத்துவத்தை
தாய்மொழிக்கு தந்திட மறுப்பது ஏனோ?போராடிப் போராடியே பெற வேண்டுமா?

போராடாமல் எதுவும் தர மாட்டீர்களா?தமிழில் வழங்காததற்கு காரணம் கூறுங்கள்
தமிழர்கள் தீர்ப்பை அறிந்திட வேண்டாமா?ஆட்சிமொழியாக ஆக்கிட வேண்டிய தமிழை
அந்நிய மொழியாகப் பார்ப்பது முறையோ?சிங்கப்பூர் மலேசியா இலங்கையில் ஆட்சிமொழி
சிங்காரத் தமிழை சீர்தூக்கி ப் பார்த்து நீ உயர்த்து!உரிய இடத்தை உன்னத தமிழுக்கு வழங்கிடுக!
உயர்தனிச்செம்மொழியின் அருமை அறிந்திடுக!


உடனடியாக தீர்ப்பினைத் தமிழில் தந்திடுக!

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (18-Jul-19, 8:23 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 42

மேலே