நாதாரிப் பயல்

நீ பெத்த அந்த நாதாரிப் பயல் எங்கடா போய்த் தொலஞ்சான்?
@@@@@@ பாட்டி, 'நாதாரி பயல்'னு சத்தமாச் சொல்லாதீங்க.
@@@@@
ஏன்டா உம் மவனுக்கு பத்து வயசுகூட ஆகல. இப்பவே ஊரு சுத்த ஆரம்பிச்சுட்டான். அவன 'நாதாரிப் பயல்'னு சொல்லாம கொஞ்சச் சொல்லறயாடா?
@@@@#
இல்ல பாட்டி. பக்கத்து வீட்டுக்கு ஒரு இந்திக்காரங்க குடி வந்திருக்காங்க. அவுங்களுக்குத் தமிழும் தெரியும். அவுங்க பொண்ணுப் பேரு 'பயல்'. நீங்க 'நாதாரிப் பயல்'னு சொன்னது அவங்க காதில விழுந்தா நீங்க அவங்க பொண்ணத்தான் 'நாதாரி'ன்னு சொல்லறீங்கனு தப்பா நெனச்சுக்குவாங்க.
#######
அவுங்க பொண்ணுக்கு 'பயல்'னு யாருடா பேரு வைக்கச் சொன்னது?
அதுக்கு நான் என்னடா பண்ணுவேன்.
■■■■■■■■■■■■■■◆◆◆◆◆◆◆◆◆■■■■■■■■■■◆
Payal = anklet

எழுதியவர் : மலர் (19-Jul-19, 6:56 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 136

சிறந்த நகைச்சுவைகள்

மேலே