பகலில் உதித்த பளிங்கு நிலா
வான் நிலவல்ல அவள் /
விண்ணிருந்து
மண்ணிறங்கிய
நிலவல்ல அவள்/
வெண்மேகம்
தொட்டணைத்த
வெண்நிலா அல்ல அவள்/
கருமேகம் மூடி மறைக்கும்
சிறு நிலா அல்ல அவள்/
தேய்பிறை காணும்
பொன் நிலா
அல்ல அவள் /
இரவினில்
உலாவிக் கொண்டு
பகலினில் உறங்கிடும்
வட்ட நிலா அல்ல அவள்/
வீறுநடை போடும்
பெண்ணிலா/
அவள் பகலில்
உதித்த பளிங்கு நிலா/