அவள் அழகு

சற்றே உயர்ந்த சிவந்த தாமரை மேனி
வளர்மதி நுதல் அதில் சிவந்த குங்குமப்பொட்டு
துள்ளும் கயல் விழிகள் , மாதுளைப்பூ செவ்விதழ்கள்

கோபுர கலசங்களென்ன கட்டிய மேலாடைக்குள்ளிருந்து
குலுங்கும் ஒரு இளமை , கொடி இடை ,
செவ்வாழைத்தண்டோ என தோன்றும்
கால்கள் அது முடிய தாமரைப் பாதங்கள்
இத்துனை அழகும் சேர்ந்த இவள் தங்க
மயில் போல் ஆடி வந்தாள் அதைக் கண்டு
நான் வியந்து நின்றுவிட்டேன் அழகை ரசித்து
' அழகு பொருள் எப்போதும் மனதிற்கு மகிழ்ச்சி''
என்று கவிஞன் கீட்ஸ் வாக்கொப்ப ….
இவள் பார்வை என்மீது படுமா என்ற
நினைப்பும் அடியோடு மறந்து அவளை
இயற்கையின் பெரும் வனப்பாய் மட்டும்
பார்த்தேன், ரசித்தேன், புளகாங்கிதம் அடைந்தேன்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (21-Jul-19, 2:00 pm)
Tanglish : aval alagu
பார்வை : 519

மேலே