நீட் தேர்வு வேண்டும் ஏன்

எங்க திரும்பி பாத்தாலும் தகுதி தேர்வு வேணாம் தகுதி தேர்வு வேணாம் அப்படீன்ற குரல் தா பேரிரைச்சலா கேக்குது
நா கொஞ்சம் காத கூர் தீட்டி ஒரு சின்ன சத்தமாச்சும் தகுதி தேர்வு வேணும்ன்னு கேக்குதா னு பாத்து ஏமாந்து போயிட்டே

அப்படி ஒரு குரல் லயும் பதிவு பன்னிட்டு ஒரு ஆரோக்கியமான விவாதம் அ உங்க முன்னாடி வைக்குறத தவிர வேற எந்த அரசியல் நோக்கமோ, வேற தனிப்பட்ட நோக்கமோ எனக்கில்ல

ஏன் தகுதி தேர்வு வேணும்னு கேட்டா ஒரு வரி பதில் ல அது தகுதிய தர நிர்ணயம் பன்றதுக்கான முயற்சி னு சொல்லிட்டு போயிடலாம்

இன்னைக்கு ஊடகங்கள் எழுப்புற கேள்விகளுக்கு பதில் தர்றது மூலமா அத பத்தின கூடுதல் விவரங்கள உங்களுக்கு தர முடியும்னு நம்புறேன்
கொஞ்சம் நீங்களும் சுயமா சிந்திச்சு பாத்துட்டு ஆதரவோ எதிர்ப்போ எந்த நிலைப்பாடு வேணும்னாலும் எடுக்கலாம்

ரொம்ப முக்கியமா இத நான் சூர்யா வுக்கு எதிரா எழுதுறேன் னு நினைச்சுக்க வேணாம்
கல்வி கொள்கைய விமர்சனம் பன்றதுக்கு எல்லாருக்கும் உரிமை இருக்குது, சூர்யாவுக்கு கொஞ்சம் கூடுதலாவே இருக்குறது உண்மைதா

சூர்யா எல்லாரயும் இத பத்தி பேச வைச்சதுக்கு கண்டிப்பா அவர் மேல மரியாதை தா கூடுது

ஆனாலும் அந்த தகுதி தேர்வு வேணாம் என்ற கருத்து ல உடன் பாடு இல்ல

இன்னைக்கு இருக்குற நீட் தேர்வுக்கு நா எழுதுற இந்த கட்டுரை பொருந்தாது
இன்னைக்கு இருக்குற நீட் தேர்வு பள்ளியில படிச்ச கல்வி ஒரு பாடத்திட்டத்துலயும் நீட் வேற பாட திட்டத்துலயும் இருக்குறது ஒரு மிக பெரிய அநீதி தான் மறுக்குறதுக்கில்ல

தகுதி தேர்வு வேணும் னு நான் சொல்றது புது பாட திட்டம் மாறின அப்பறம் அதே பாட திட்டத்துல இருந்து நடத்த படுற தகுதி தேர்வ பத்தி மட்டுந்தான்

அப்பறமா தேசிய அளவுல ஒரே தகுதி தேர்வு சமநீதியா னு கேட்டா நான் அந்த விவாதத்துக்கே வரல முதல்ல
தேசிய மயமாவோ , இல்ல மாநிலத்துக்கு பொதுவாவோ , இல்ல ஒவ்வொரு பல்கலை கழகமும் தனி தனியாவோ தகுதி தேர்வு நடத்திக்கட்டும்
ஆனா கண்டிப்பா தகுதி தேர்வு னு ஒன்னு வேணும். தகுதி தேர்வு மேற்படிப்புக்குக்கு தகுதியான மாணவன தேர்ந்தெடுக்க உதவுது

சரி அப்ப பள்ளியில ஒரு பொது தேர்வு நடந்துச்சே. அது வீண் தானா? எதுக்கு இன்னோரு தேர்வு?

பள்ளியில இருக்குற பொது தேர்வு பல பாடங்கள்ல ஒரு அடிப்படை பாட திட்டத்தோட தயார் பன்னி இருப்பாங்க
அந்த பாட திட்டத்துல பயிற்சி வினாக்கள் னு குடுக்க பட்டுருக்குறத படிச்சு மட்டும் தேர்ச்சி மட்டுமில்ல சதம் உம் கூட வாங்கிடலாம்
இது அடுத்து பல தரப்பட்ட மேற்படிப்புக்கு ஒரு அடித்தளமா இருக்குறதுதான் இந்த பொது தேர்வு தேர்ச்சி

இதுல பல துறைகள்(மருத்துவம் , பொறியியல் , கலை அறிவியல். ஆராய்ச்சி, இன்னும் எனக்கு தெரியாத பல துறைகள் ) பயில விருப்ப படுறவங்க இந்த ஒரே பாட திட்டத்த படிச்சு தேர்ச்சி பெற்று பரவி போறாங்க

இந்த பொது தேர்வு முடிவுல எடுக்குற மதிப்பெண் மட்டுமே மேற்படிப்பு க்கு போதாது
அந்த மேற்படிப்பு சேர்க்கை க்கு திறமையானவங்கள கண்டுபிடிக்க
தகுதி தேர்வு நடத்த படனும்
இந்த தகுதி தேர்வுல கேட்க படுற கேள்விகள் பள்ளியில படிச்ச அதே பாட திட்டத்துல இருந்து தா இருக்கும்

எழுதியவர் : (22-Jul-19, 11:26 pm)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 118

மேலே