நீர்ப்பரப்பில் ஒரு மீன்

கவிதைமணி = நன்றி
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு
°° நீர்ப்பரப்பில் ஒரு மீன்°°

மீனினை க்கண்டு நாரையின் கண் பிதுங்கியதோ வதனைக் கண்டிட்டு
கோரையினிடையில் ஒதுங்கியதோ
உயிருக்கு ஆபத்தென வெதும்பியதோ
நீர்ப்பரப்பில் ஒரு மீன் தனிமையில்
கடவுளே யென்னை காப்பாற்றென
தண்ணீரில் கண்ணீர் ததும்பியதே
எவர் கண்ணேனும் கலங்கியதோ


காதலைத் தெரிந்தவள் காத்து நிற்பாள்
மீனுக்கு ஏங்கும் நாரையைப் போல்
காதலை அறியாதாள் பூத்து நிற்பாள்
தேவையற்ற ஒன்று என்று இவற்றுள்
ஒருத்தி கவலையில் ஏங்குவாள்
ஒருத்தி கவலையின்றி தூங்குவாள்


இங்கே மீன்விழி கொண்ட பெண்மான்
மலர்விழிகளிலும் அவ்வச்சம் தீராது
அரங்கேறும் அவல நிலைகள் தானே
வெட்டவெட்ட துளிர்விடும் முருங்கை
மரத்தைப் போன்றன்றோ துளிர்விடும்
வண்ணமாகவே இருக்கின்றது முடிவு
ஒன்று உண்டாகுமா துடிக்கின்றது

°°°°°°°°°

ஆபிரகாம் வேளாங்கண்ணி
கண்டம்பாக்கத்தான்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (23-Jul-19, 11:34 am)
பார்வை : 167

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே