வள்ளுவன் வழியில் சிந்தித்தேன் 2 மலர் முகில் அவள்
வள்ளுவன் தன்வழியில் சிந்தித்தேன் பூக்களும்
சிந்தியது செந்தமிழ் பா !
குயில்கூவும் தென்றலின் தோட்டத்தில் காக்கையும்
கேட்டிடும் தன்னை மறந்து
கொடியினில் மெல்ல மலர்ந்தன பூக்கள்
கொடியும் அசைந்ததெழி லாய்
மயிலுக்கு என்ன மகிழ்ச்சி முகில்கூட்டம்
இன்றுவானில் சூழ்ந்தன வோ !
புன்னகைப் பூக்கள் முழுதும் மலர்ந்தன
புன்னகை யாள்வந்தா ளோ !