அதிரூபன் தோன்றினானே கவிஞர் இரா இரவி

அதிரூபன் தோன்றினானே ! கவிஞர் இரா .இரவி !

அதிரூபன் தோன்றினானே என்று கூட்டம் கூடியது
அதில் நால்வர் மரணம் அடைந்தனர் வேதனை !

கடவுளே காப்பாற்று என்று வேண்டிட சென்றபோது
கடவுள் காப்பாற்றவில்லை உயிர்கள் பிரிந்தன !

முதியவர்கள் கர்ப்பிணிகள் நோயாளிகள்
முற்றிலும் வரவேண்டாம் என்று அறிவிப்பு !

கடவுளின் பெயரால் வருடம் ஒரு வதந்தி
கண்டபடி பரப்பி வசூல் வேட்டை நடக்குது !

அத்தி வரதரைக் காண வேண்டுமென்று
அடங்காத கூட்டம் தினமும் கூடுது !

உள்ளூரில் உள்ள பெருமாளைக் காண
ஒருவரும் வரவில்லை வருத்தத்தில் அவர் !

ஆட்டு மந்தைக் கூட்டமென கூட்டம்
அல்லல் பட்டு இடிபட்டு வருத்தத்தில் !

காவலரகளும் பிடித்து இழுத்து விடுகின்றனர்
காணும்போது பாவமாக இருக்கின்றது !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (23-Jul-19, 9:02 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 64

மேலே