வாழ்க்கை -சதுரங்கம்
சிந்தனைத் துளியும் இல்லாது காயை
நகர்த்த குதிரை மறையும் யானையும்
காலாட்படையும். எதிரிகளுக்கு வெற்றி
இதுவே சதுரங்கம் விளையாட்டின் சாரம்
இரு நாடுக்கிடையே நடக்கும் யுத்தமும்
இப்படித்தான் ….ஒரு உண்மை சதுரங்கம்
சிந்தனை ஏதுமில்லாது காலை முன்வைத்தால்
காலே இல்லாமல் போகும் வெற்றி எப்போதும்
சூட்சும புத்தி காரருக்கே வெறும் வீரம்
மட்டும் பயன் தராது , இது அன்றும் இன்றும்
என்றும் நிஜம் நிஜமே