தூக்கு கயிறு

ஒத்த முடிச்சு
கயிர் தான்
நெரிக்கி பாத்தா
போக போகுது
உயிரு தான்
தப்பு செய்ய
துணிந்து பாரு
இந்த கயிற மட்டும்
நெனச்சி பாரு
கயிறு மாட்டும்
காவலர்க்கு கூட
இதயத்திலே
தோணுதே
இந்த கயிறு
இப்ப எந்த
உசுற எடுக்க
போகுதே
பத்துமாசம்
சுமந்தவ இங்கு
பாச கயிறு
போட்டாலே
பாதில வந்தவ கூட
இப்ப தாலி கயிறு
அறுப்பாலே
எதுக்காக
தவறு செஞ்சேனு
நானும்
இப்ப நினைக்கிறேன்
பந்தம் பாசம்
வேனுமுனு
நானும்
இப்ப அழுகிறேன்
என்ன வந்து
ஏங்குநாலும்
நீயும் இறங்கவில்லையே
நான் யேர போகும்
மேடையை பாக்க
என் தாயும் வரவில்லையே
பொறுத்தது போது என்று
மேடை ஏறி வந்தேனே
பொறக்கையை ஏத்தி விட்டு
என்னை எடுத்து சென்றாய்யே