கருவாட்டு இதயக்காரி
எந்தன் கண்களில்
குண்டூசி குத்திய பார்வை;
அலையும் இடங்களில்
அலைபாய்கிறது என் இதயம் அவளுடன்;
அவள் சுட்டி தொல்லை இல்லாமல்
என்னை சுட்டுத் தள்ளும் தோட்டாக்கள்;
இனி!
நாட்குறிப்பில் பேனா முள்ளில்
தொட்டு நனைக்க காத்திருக்கும் கண்ணீர்;
வண்ணமில்லாமல் எழுத காத்திருக்கும்
இருண்ட காலம்;
அதை நினைக்கையில்!
கருவாட்டு முள்ளிலும் உதிரம் கொட்டுகிறதே!
அவள் இதயத்தில் உதிரம் இல்லையோ?
கருவாட்டு இதயக்காரி!