இரகசிய போலீஸ்

" இரகசிய போலீஸ்"

ஒரு கொள்ளை கூட்டத்தை பிடிக்க மூன்று வருஷங்கள் ஓடிவிட்டது கொள்ளை அடிப்பவர்கள் நகரத்தில் ஒரு சாரார் திடீர் திடீரென காரு பங்களா என்று ராஜவாழ்க்கை வாழ்பவர்களாக தோன்றுவதால் எழுந்த சந்தேகம்

லம்பாக ஒரு இடத்தில் மழைகாலமாக பார்த்து கையை வைப்பார்கள் அப்போது நாயை விட்டு மோப்பம் பிடித்து கண்டுபிடிக்க சிரமமாக இருக்கும் என்பதால் கோடைகாலத்தை தேர்ந்தெடுக்கிறார்கள் கொள்ளை அடித்துக்கொண்டு கானாமல் போய்விடுவார்கள் அதற்காக ஏதாவது ஒரு கிராமத்தை தேர்ந்து எடுத்து கொள்வார்கள் என்பது சொல் கேள்வி

இராப்பகலாக அங்கேதான் பெண்கள் கிராமத்தை ஒட்டி இருப்பார்கள் ஆண்கள் கிராமத்தை எட்டி இருப்பார்கள் இரவு நேரங்களில் சந்தித்து பேசிக்கொள்வார்கள் கொள்ளை போனதால் கூச்சல் பரபரப்பு குழப்பம் தேடல் இவையெல்லாம் ஓய்ந்த பின் பழயபடி தங்கள் வாழ்க்கையை ஒன்று சேர்ந்து தொடரு கிறார்கள் என்று வதந்தி அதன் உண்மை பொய்யை நிருபிக்கவே காக்கிச்சட்டைகள்

அதுவரை வேறு யாரையாவது அந்த பங்களா வீட்டில் குடியிருக்க வைப்பார்கள் யாராவது சந்தேகப்பட்டு விசாரிக்க வந்தால் வாடகைக்கு இருக்கிறோம் இதோ பாருங்கள் வாடகைக்கு இருக்க போட்டுக்கொண்ட அக்ரிமெண்டு பத்திரம் என்று காட்டுவார்கள் அது உண்மையோ போலியோ என்பதால் எழும் சந்தேகம்

இருந்த காவலர்களால் மூன்று ஆண்டாக ஒரு ஆணியைக்கூட பிடுங்க முடியவில்லையே என்பதை மனதில் கொண்டு டி.ஜி.பி. சில காவலர்கள் மேல் சந்தேகப்பட்டு துருவித்துருவி விசாரிக்க வைத்ததில் நேருக்கு மாறாக சொல்வதை வைத்து கொள்ளை யர்களுக்கு உதவி இருப்பதை தெளிவாக தெரிந்து கொண்டார்

ஆனாலும் வெளியில் இதுபற்றி மூச்சு விட்டால் போலீஸ் இலாக்காவுக்கே கெட்டப்பெயர் இவர்களை கண்காணிக்கும் பொருப்பு என் கையில் இருப்பதால் எனக்கும் கெட்டபெயர் வரும் அதையும் காக்கவேண்டும் கொள்ளையரை பிடிக்கவும் வேண்டும் என்பது அவரது இலக்கு

டி.ஜி.பி ஒரு டி.ஸி.பியை இறக்குமதி செய்தார் இரகசியமாக அவரிடம் பேசி ஒரு மாஸ்டர் பிளான் போட்டார்கள் அவருக்கு ஆறு பாஷைகள் பேச எழுத படிக்கத்தெரியும் அதனால் அவரை எங்கிருந்து இறக்கினார்கள் என்பதில் குழப்பம், எந்த நாட்டைச்சேர்ந்தவர் என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை இளம்வயதுடையவர் துடிப்பானவர் கொழுத்த பணக்காரர் வீட்டுப் பிள்ளை எந்த கொம்பனுக்கும் பயப்படாதவர் கொம்பை அறுத்து எறிபவர் பெரிய போஸ்டு என்று பந்தா காட்டிக்கொள்ள மாட்டார் இறங்கி நாடி நரம்புகளுள் நுழைந்து அறுப்பவர் அவரது கடமை பணிசெய்து கிடப்பதே இந்த வேலைக்கு வர வேண்டிய அவசியமே இல்லை ஒரு வைராக் கியத்தின் பேரில் படித்துவிட்டு வந்தவர்

அந்த வைராக்கிய மானது படித்துக் கொண்டு இருக்கும் போது ஒரு பெண்ணை காதலித்தார் அவள் ஒரு எஸ்.ஐ. யோட மகள் என்பது அவருக்குத் தெரியாது, தெரிந்தவர்கள் அவளோடு பயத்தில் பேச்சு வார்த்தையே வைத்துக்கொள்வதில்லை அது அவளுக்கு ஒரு குறையாக இருந்தது அதனால் அவளும் சொன்னவள் இல்லை ஆனால் எஸ்.ஐ. க்கு தெரிந்து விட்டது அவன் நம்ம பொண்ணை காதலிக்கிறான் என்று அவனை கூப்பிட்டு °° உனக்கு காதலிக்க ஒரு எஸ்.ஐ. யோட பொண்ணு கேக்குதா அவளை ஒரு போலீஸ் ஆப்பீசருக்கு தான் கொடுப்பேன் வீணா அவ பின்னால் சுத்தாதே அப்புறம் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சத்தம் போட்டார் °° அன்னைக்கே எடுத்த முடிவு நாமும் ஒரு போலீஸ் ஆபிஸராக ஆகனும் என்று படிப்பில் இறங்கிய காலத்தில் பெண்ணுக்கு கல்யாணத்தை முடித்துவிட்டார் அவளை கட்டிகொடுத்து ஒரு குழந்தைக்கு தாயாவும் ஆகிவிட்டாள் கொடுத்தது என்னவோ போலீஸ் ஆப்பீசருக்குத்தான் சரியான மொடாக்குடிகாரன் லஞ்சம் வாங்கிட்டான்னு சஸ்பெண்டு செய்துவிட்டார்கள் இப்போ பொண்டாட்டி சம்பாதனையில் காலத்தை ஓட்டுறான் என்ன பண்றது தலைவிதி யாரைவிட்டது அவள் இஷ்டப்பட்ட வனுக்குத்தான் கட்டி வச்சேனா என் திமிர்வாட்டம் என்று இன்றைக்கு புலம்புகிறார் எஸ்.ஐ .

டி.ஸி.பி ஒரு துணிச்சல் காரர் அவர் தொட்ட காரியம் முடியாது என்று ஒருபோதும் சொன்னவரில்லை, அப்படி ஆனதுமில்லை அவரைப்பற்றி அதிக விளம்பரம் கிடையாது அதை விரும்புவதும் இல்லை தப்பித்தவறி மீடியா காரர்கள் கண்ணில் பட்டு சூழ்ந்து கொண்டால்
°°ஏங்க எங்களுக்கு மேல இருக்கும் அதிகாரிகள் சொல்லும் வேலையை செய்கிற சாதாரணமான வர்கள் நாங்கள் தலையை பிடிக்காமல் வாலை பிடித்துக்கேட்டால் என்ன சொல்லும் வழிவிடுங்க °° என்று புறப்பட்டுவிடுவார்

பத்திரிக்கை காரர் ஒருவர் அவர் திறமையைப் பாராட்டி வாழ்த்துக்களை கூறினார் °° சார் யார் இறங்கி வேலை பார்க்கிறவங்க என்று எல்லாம் யாருக்கு தெரியுமோ தெரியாதோ எல்லாம் எனக்குத்தெரியும் அதனால் உங்களுக்கு தொல்லைகொடுக்க விரும்பவில்லை எனவே கங்கராஜ்லேஷன் சார்°° என்று கூறுவார்கள்

கொள்ளையர் தங்கும் கிராமங்களை ஒரு சாதாரண சைக்கிள் ரிக்ஸா காரனைப்போல், ஆட்டோக் காரனைப்போல் டாக்ஸி ஓட்டுனரைப்போல் போய் துழாவி பார்த்துக்கொண்டு வந்துவிட்டார் அவருக்கென ஒரு ஸ்கெட்ச் போட்டு வைத்திருந்தார் அதைப்பற்றி யாரிடமும் மூச்சு விடவில்லை டி.ஜி.பி. உள்பட ஒரு நம்பிக்கை என்னால் முடியும் என்ற பலமான நம்பிக்கை அவருக்கு

டி.ஜி.பி கேட்டார் °°என்ன டி.ஸி.பி நிலவரம் முன்பு இருந்தவர்கள் மூன்று முன்னூற்று அறுபத்தைந்து நாளை அதாவது ஆயிரத்து தொன்னூற்று ஐந்து நாட்களை எடுத்தும் ரிசல்ட் ஸீரோ உங்களுக்கு எத்தனை நாள் எடுக்கும் என்று தெரிந்து கொள்ளலாமா °° என்று

சடாலென முன்பின் யோசிக்காமல்
°°வெறும் ஏழு நாள் போதும் சார்°° என்றார் டி.ஸி.பி

அவரை ஆச்சரியமாக பார்த்தார் இவன் கொஞ்சம் வித்தியாசமான வனா கத்தான் தெரிகிறான் என்று நினைத்து
°°வெரீகுட் கேரியான் அதற்காக என்ன உதவி வேண்டுமானாலும் தேவைப்படும் போது குறுஞ்செய்தி அனுப்பினால் போதும் அடுத்த ஒருமணிநேரம் போதும் அது உங்களை வந்து சேரும் இதற்காக எத்தனை பேர் வேண்டும் ஒருவேன், இரண்டு வேன் எத்தனை வேன் நிறைய வேணும் °°

°°ஆறுபேர் போதும் என்னை சேர்த்து ஏழு பேர் அது போதும் சார் °° மகிமை சிரிப்பு சிரித்துக்கொண்டு

°° இஸிட்..... ஆர் யூ சுவேர்°° சந்தேகத்தால் கேட்டார்

°°ஏஸ் சார் நோ டவுட் அபௌட் இட் சர்
°° என்றார் டி.ஸி.பி.

டி.ஸி.பி பெண் வேடத்தில் புறப்பட்டார் கூட ஆறு பேர் அவர்கள் திறமையை பார்த்து அல்ல யாருக்கு பெண்வேடம் போட்டால் பெண்களை போலவே இருப்பார்கள் என தேர்ந்து அழைத்து சென்றார் அவ்வூரில் வெளிவாசல் போவது ஓப்பன் ஏரியாவில் தான் என்பதை ஏற்கெனவே அறிந்து வைத்திருந்தார் அவரோடு ஆறு போலீஸ்காரர்கள் அவர்களும் பெண்வேடத்தில் இயங்கினர் ஊர் பெண்கள் அதிகாலை இருட்டு இருக்கும் நேரத்தில் கிளம்பி வெளிவாசல் முடித்துக் கொள்வார்கள் அவர்களிடம் புலன் கிடைக்கும் என்று நம்பி அவர்களோடு இவர்கள் ஏழுபேரும் பறப்பட்டார்கள் நிஜப்பெண்கள் போய் அமரும் இடத்தை விட்டு தள்ளியே அமர்வார்கள் காரணம் தம்மை ஆண்கள் என்பதை கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காகவும், அவர்கள் பெண்கள் அநாகரீகமாக நடந்து கொள்ள கூடாது என்பதற்காகவும் ஆகும் நான்கு நாட்கள் இப்படியே நடந்தது ஐந்தாம் நாள் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு செடி மறைவில் தான் அமர்வார்கள் என்பதை அறிந்து இவர்கள் வருவதற்கு முன் சென்று ஒவ்வொரு செடியிலும் ஒவ்வொரு மைக்ரோ போன்களை இலைகள் மறைவில் பொருத்திவிட்டு போய்விட்டு அவர்கள் வரும் நேரம் பார்த்து இவர்களும் புறப்படுவார்கள் போய் செடிமறைவில் அமர்ந்து கொண்டார்கள் அப்போது இவர்களுக்குள் பேசிக்கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு, இவ்வளவு முயற்சி பண்ணி சிறு கெலாப்பழமாவது கெடைக்காதா என்று நினைத் திருந்தார்கள் ஆனால் இங்கே பெரிய பலாப்பழமே கெடைக்கும் என்று நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள் அப்படி ஒரு துப்பு கிடைத்துவிட்டது மாறாக அங்கே நான்கு ஆண்கள் வந்தார்கள் அவர்கள் வருவதைக்கண்டு நான்கு பெண்கள் போய் அந்த நான்கு பேரை ஒரு செடிமறைவில் சந்தித்து பேசினார்கள்

ஆண்களில் ஒருவன் கேட்டான் °° நாம் இங்கிருப்பது யாருக்கும் தெரிகிற மாதிரி தோன்றுகிறதா °° என்று கேட்கிறான்,

பெண்களில் ஒருத்தி
°° அப்படி இதுவரை யாரும் வரவில்லை நீங்கள் பயந்து தொலைக்காதீர்கள்°° என்கிறாள்

°° நகைகள் எல்லாம் மாற்றிவிட்டீர்களா°° என்று மெதுவாக குரலில் கேட்கிறான்

ஒருவள் °°பாதியை மாற்றிவிட்டோம் மீதியை ஒரு ஏழ்மையிலும் ஏழ்மையான பொற்கொல்லரை பிடித்து கொஞ்சத்தை உருக்கிவிட்டோம் மீதம் உள்ளதையும் விரைவில் முடித்துவிடுவோம் அதன் பிறகு எப்போதும் போல் நமது பங்களாவிற்கு போய்விடலாம் அதுவரை நீங்கள் ஜாக்கிரதையாக இருங்கள் °° என்று சொன்னாள்

இவர்கள் வெளிவாசலுக்கு வரவில்லை அந்த சாக்கில் ரகசியத்தை பகிர்ந்து கொள்ளவே வருகிறார்கள் என்பது தெளிவாகியது ஆனாலும் கொள்ளை அடித்தவர்கள் இவர்கள் தான் என்பது நிச்சயமாகிவிட்டது இவர்கள் பேசியது எல்லாமும் பதிவு ஆனது அதை டி.ஜி.பிக்கு அருப்புக்கோட்டை இருந்தார்

அதற்குள் டி.ஸி.பி யோடு இருந்த ஐந்து பேரை அழைத்து துப்பாக்கியோடு °° அவர்கள் நாலுபேரையும் உயிரை எடுத்து விடாதீர்கள் ஓடவிடாமல் கடுங்காலில் சுடுங்கள் இது விஷயம் அந்த நான்கு பெண்களுக்கும் தெரியக்கூடாது அவர்களிடம் இருக்கும் கம்முனிகேசன் சாதனத்தையும், வெப்பன்சையும் முதலில் கைபற்றுங்கள் உங்களை நம்பி டி.ஜி.பி. க்கு சேதி அனுப்பிவிட்டேன் சொதப்பிடாதீங்க வேன் வந்துக்கொண்டு இருக்கும் அதுவரை ஜாக்கிரதையாக இருங்கள் வருவது யாரும் சந்தேகப்படும்படிக்கு போலீஸ் வேனாக இருக்காது சாதாரண வேனாகத்தான் அனுப்பச்சொல்லி இருக்கிறேன் வண்டி எண்ணை ஒருவரை கிட்டே அழைத்து காதில் சொன்னார் ஏனென்றால் நம்மை ஒருவேளை அவர்கள் தெரிந்து கொண்டு அவர்கள் வேனை நான் குறிப்பிட்ட நெம்பர் பிளேட்டு போட்டு அனுப்பி அவர்களை காப்பாற்ற முற்படலாம் அதற்காக வண்டி எண்ணை ரகசியமாக இருக்கட்டும் உங்களையும் ஜாக்கிறதையாக பார்த்துக் கொள்ளுங்கள் ஒவ்வொரு நிமிஷமும் என்னை கான்டாக்ட் பண்ணிக்கொண்டு இருங்கள் அதைவைத்து தான் அடுத்த முடிவை நம்மால் எடுக்க முடியும் அதுவரை உங்கள் வேஷத்தை கலைக்காதீர்ரகள் °°

நான்கு ஆண்களையும் டி.ஸி.பி சொன்னது போலவே ஒரு வகையாக வலைத்து பிடித்துவிட்டார்கள் சரியாக மாட்டினார்கள் டி.ஸி.பி சொல்லிக் கொடுத்தது போலவே வேலை கணகச்சிதமாக முடிந்தது சந்தோஷப்பட வேண்டிய விஷயம் காவலர்க்கு காயங்கள் உயிர் இழப்போ ஏற்படவில்லை

டி.ஸி.ப்பி ஒரு டாக்சியில் போய் பொற்கொல்லனை மடக்கி காரில் ஏற்றிக்கொண்டார் பின் அந்த நான்கு பெண்களையும் வாரிப் போட்டுக்கொண்டார் நான்கு ஆண்களும் நான்கு பெண்களும் மற்றும் பொற்கொல்லனும்
டி.ஜி.பியிடம் அனுப்பப்பட்டார்கள் ரகசியமாக வைக்கப்பட்டது அவர்களை

இவர்கள் எங்கெங்கே நகைகளை விற்றார்கள் ஒரு பெண்ணை அனுப்பப்பட்ட போலீஸ்களில் பத்து போலீசோடு அனுப்பி அவள் சொல்லச்சொல்ல எல்லாவற்றையும் ரிக்கவர் பண்ணினார்கள்

மொத்தம் ஐந்து கோடி பெறுமானமுள்ள தாக கணக்கில் வந்தது நகைகளை பறிகொடுத்தவர் ஹார்ட் அட்டாக் வந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இப்பவோ எப்பவோ இன்னும் கொஞ்சம் நேரமோ என்ற ஆபத்தில் இருந்தார் அவருக்கு இன்நற்செய்தியினை கொண்டு போனார்கள் அவர் அதை கேட்டதும் எழுந்து உட்கார்ந்து கொண்டார் என்னை டிஸ்சார்ஜ் பண்ணுங்கள் என்று கேட்டுக் கொண்டார் நல்ல சேதியை காதில் போட்டவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட் அடித்தார்

அந்த சந்தோஷத்தில் காவலர் அலுவகத்தையே ரெனோவேஷன் செய்து கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்தினார் இன்றைய தினத்தில் இதுபோன்ற உள்ளங்களை காண்பதறிது இல்லையா

காவல் துறையினர் இல்லத்தில் நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் அழைக்காமல் போனாலும் முதல் ஆளாக நின்று அவர்கள் சந்தோஷத்திலும் சரி துக்கத்திலும் சரி பங்கெடுத்துக்கொள்வார் வேறு யாரும் அவர்களை சந்தேகப்பட்டுவிடாத வகையில், அவர்கள் பெயருக்கு இழக்கு ஏற்பட்டுவிடாதபடிக்கு நடந்துக் கொள்வார் ஆனாலும் யாருக்கும் ஒரு பைசாகூட லஞ்சமாக அவரிடம் கேட்டதும் இல்லை அவராக யாருக்கும் கொடுத்தவரும் இல்லை அதனால் தானோ என்னவோ அவரின் பொருள் அவரைவந்து சேர்ந்தது

இன்னொன்று டி.ஸி.பி. யின் வீட்டில் தன் அம்மாவுக்கு உதவிக்காக ஒரு அம்மையாரை வைத்திருந்தார்கள் பதினைந்து வருஷமாக இருந்தவர் உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார் சிகிச்சை பலனளிக்காமையால் காலமாகிவிட்டார் அந்த அம்மாவுக்கு சொந்தம் பந்தம் என்று சொல்லிக்கொள்ள யாருமே கிடையாது அதனால் தன் பங்களாவிற்கு உள்ளயே ஒரு ரூம் கட்டி கொடுத்து வைத்திருந்தார்கள் இப்போது காலமாகிவிட்ட காரணத்தால் டி.ஸி.பி. தன் தோளில் சுமந்து சுடுகாடு வரை சென்று அவரே கொள்ளி வைத்தார் என்றால் தாம் பெரிய பதவிக்காரன் என்ற டம்பம் இல்லாததினால் தானே அந்த அம்மாவும் எங்கள் கும்பத்தில் ஒருத்தர் தான் என்ற எண்ணம் இருந்ததால் தானே

இப்படியான ரகசிய போலீஸ் இவர் மட்டும் தானா அப்படி இல்லை இன்னும் இருக்கிறார்களா என்பது சந்தேகமே.

திருடர்களுக்கு துணையாக இருந்தவர்க்கெல்லாம் டௌன்கிரேடு செய்யப்பட்டார்கள்

அதிக சந்தோஷத்தில் டி.ஜி.பி டி.ஸி.பியிடம் சொல்கிறார் °°இந்த ஆண்டு சாதனையாளர் பட்டியலில் உன் பெயரை பரிந்துரை செய்துள்ளது நமது டிப்பார்ட்மென்ட்°° என்று சொன்னார்

அதற்கு ரீயாக்க்ஷன் எதுவும் தென்படவில்லை டி.ஸி.பியிடம்

°°என்ன மிஸ்டர் குமரேசன் ரீயாக்க்ஷன் ஒன்றையும் காணோம் °°

°°எனக்கு இந்த பரிந்துறைப்பின் மேல் இன்ட்ரெஸ்டு இல்லை சார் தயவு தாட்சண்யமின்றி உண்மையான செயலுக்காக பாராட்டி கிடைக்க வேண்டும் அப்படியொரு பதக்கம் எனக்கு தேவையில்லை சார் ஐ ஆம் வெரி சாரி டூ. சே °° என்றார்

பொதுவாக அவர் ரகசிய போலீஸ் பிரிவை சேர்ந்தவரில்லை, அவர்களைக்காட்டிலும் ஒருபடி மேலாகவே இயங்கக்கூடியவர் என்பது நிரூபணமாகியது


ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (25-Jul-19, 2:50 pm)
Tanglish : eragasiya police
பார்வை : 96

மேலே