விதைத்தவன் உறங்கலாம் விதை உறங்காது

விதைத்தவன் உறங்கலாம்
விதை உறங்காது
□□□
அந்த ஊரில் மொத்தம் ஜனத்தொகை
நாற்பது சதம், திருமணமான
ஆண்களும் பெண்களும்;

நாற்பது சதம், பிள்ளைகள் அதில் குமரிகளும் வாலிபர்களும் அடக்கம்;

ஐந்து சதம், கணவனை பறிகொடுத்த விதவைகள்; ஊரார் உபசரிக்கும் மானம் நஷ்டத்தில் வரவு செலவு கணக்கை பார்த்த வண்ணம், காலத்தை புறட்டிப் போட்டுக்கொண்டு காலத்தை கழிப்பது.

ஐந்து சதம் மனைவியை இழந்து தானே உழைத்து தானே சமைத்து உண்டு அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறவர்; அதோடு எங்கேயும் திருட்டு நுழைவு நுழைந்துவிடாமல் ஊரார் பார்வைக்குள்
மிருககாட்சி சாலையில் மிருகத்தை அடைத்து வைத்து இருப்பதைப்போல்

மீதி இருப்பவர் கிழவன்கள் கிழவிகள் எமனின் அழைப்பிதழ் வழங்க வரும் வருகையை வரவேற்க வழிமேல் விழிவைத்து காத்து சிலர் கண் பூத்தும் கிடப்பவர்களே, பெற்ற பிள்ளைகளை வயிற்றில் சுமந்து ஈன்றெடுத்து , நெஞ்சில் சுமந்து பால் கொடுத்து, இடுப்பில், தோளில், கழுத்தில் சுமந்து உலகிற்கு அதுகளை பரிச்சயம் செய்து வைத்து அரசாங்க பதிவேட்டில் பெயரை பதியவைத்து எப்படியும் வாழ்வதெல்லாம் வாழ்வாகாது உலகம் அதை ஏற்காது ஏற்காது, இப்படித்தான் வாழவேண்டும் அதுதான் வாழ்க்கை என்று கற்றுக்கொடுத்து தனிமையில் தவிக்கிறார்கள்

அவ்வூரில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது கண்கள் பிதுங்கும் அளவுக்கு, வாய் தன்னையறியாமலேயே பிளக்கும் அளவுக்கு, பயத்தால் வீட்டுக்கு வீடு வாசக்கதவுக்கொரு வெளி பக்கமாக பாதுகாப்பு கதவுகள் மாட்டிக்கொள்ளும் அளவுக்கு பயம் காரணம் தெருவுக்கு தெரு எழும் ஒரு கிசுகிசுப்பு

வலைவிரித்து பார்த்ததில் வசமான மீன்கள் நான்கு கிடைத்தது பார்க்கவும் கேட்கவும் பரிதாபமாக இருந்தது இதயத்தில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் கொடுமையான அதிசயம் அது

படித்துக்கொண்டிருக்கும் சில முக்கிய புள்ளிகளின் பெண் பிள்ளைகள் திடீர் திடீரென வாந்தி எடுத்தனர், மயக்கம் போட்டு விழுந்தனர்

அடிமடியில் நெருப்பை கட்டிக்கொண்டிருப்பதற்கு சமம் பெண் பிள்ளைகளை வளர்ப்பது என்பது முற்றிலும் உண்மை ;

வீட்டில் உள்ளவர்கள் அறண்டு போய் கிராமத்தில் நாடிபார்ப்போரை நாடினார்கள் கையை பிடித்து பார்த்துவிட்டு போட்டார்கள் பேரிடியை தலையில்

பாதி உயிர்போய்விட்டது போலானது, பெண்ணை பெற்றவர்க்கு;

அவர்கள் சொன்னதின் மேல் நம்பிக்கையில்லாமல், டவுனு ஆஸ்பத்திரிக்குப்போய் டாக்டரை அனுகினார்கள்,

அவர்களும் அதே இடியை போட்டார்கள் , கர்பமாகி மூன்றாவது மாதம் நடக்கிறது என்று சான்று சீட்டு பகிர்ந்து விட்டார் டாக்டர் ,

அதாவது ஒரு நான்கு குடும்பத்தில் பெண்ணைப் பெற்றவர் இல்லத்தில் வெளியில் சொல்லமுடியாத ஒரே கூச்சலும் குமுறலும் குழப்பமுமாக இருந்தது ;

பிரம்மா எழுதிய தலையெழுத்தை அழித்து விட்டு உன் தலையெழுத்தை நீயே எழுதிக்கொண்டு விட்டாயடி என்று அவர்களின் பெற்றோர்கள் புலம்பி கொட்டினார்கள்

ஏண்டி உனக்கு ஆம்படியான் தேவையாக இருந்திருந்தால் பெத்தவங்க எங்க கிட்ட சொல்லியிருக்கலாமே

எனக்கு படிப்பு போதும் கல்யாணம் பண்ணி வையிங்கோ என்று கௌரவமா பண்ணி வச்சி இருக்க மாட்டோமா.

..ஓ..ஹோ.....இவங்களே வயித்துக்கும் வாயிக்கும் எட்டாமல் திண்டாடி க்கிட்டு இருக்கிற இவங்க

நம்மை படிக்க வைப்பதற்கும் தொட்டுக்க தொடைச்சிக்க இருக்கிற இவங்க

நமக்கு எங்கே கல்யாணம் பண்ணி வைக்க போறாங்கன்னு நீயா எடுத்துக்கொண்ட முடிவா இந்த முடிவு என்று மனசில பட்டதையெல்லாம் பேசினார்கள்

இன்னொரு வீட்டில் இந்த குடும்பத்தோடு மானம் மரியாதை கௌரவம் எல்லாத்தையும் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு குழிதோண்டி பொதைச்சிட்டியேடி என்ற புலம்பலே

அக்கம்பக்கம் உள்ளவர்கள் விடிந்தால் வேலை வித்திக்கு ஓடுகிறவர்களின் தூக்கம் கெட்டுப்போவதால்,

அவர்களே வீடேறிவந்து கேட்க புறப்பட்டார்கள் பார்த்தால் முன்நாள் பஞ்சாயத்து தலைவர் அதனால்

அச்சப்பட்டு கேட்கலாமா வேண்டாமா என்று யோசித்தார்கள் இருந்தாலும் வந்ததே வந்தோம் கேட்டேவிடுவோமே என்று நினைத்து வீட்டுக்குள் நுழைந்தேவிட்டார்கள்

°° என்னங்க இது, என்ன நடக்கிறது இங்கே, நேரம் காலம் பார்க்காமல் கூச்சல், அடிதடி ஏன் போடுகிறீர்கள்,

ஒன்னு கடக்க ஒன்னு ஆகிவிட்டால் அது காவல் துறையினர் பார்வைக்கு வந்து,

அக்கம்பக்கம் குடியிருக்கும் எங்களை வேலை வித்திக்கு போகவிடாமல் விசாரிப்பு என்ற பெயரில்,

எங்களையெல்லாம் அங்கே வா இங்கே வா என்று தொல்லை கொடுப்பார்கள், உங்களால் இது எங்களுக்கு தேவைதானா,

கொஞ்சம் பார்த்து எதுவாக இருந்தாலும் அமைதியாக கேட்டு சுமுகமாக உங்களுக்குள்ளேயே இரண்டாம் பேருக்கு சந்திரிபடாமல் தீர்த்துக்கொண்டால் என்ன°° என்று கேட்டார்கள்

அதனை கேட்டதும் சற்று அமைதி நிலவியது
°° ஏங்க அறியாப் பொண்ணு உங்க வீட்டில் இருந்து அதுகள் வாயில் வயிற்றில் வாங்கிக்கொண்டு வந்து விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள்

அந்த சமயத்தில் பெத்தவங்க உங்களுக்கு எப்படி இருக்கும் ;

அதுவே நீங்களாகவே இருந்தால் என்ன பண்ணுவீர்கள், சொல்லுங்கள், நீங்க சொல்றமாதிரி சுமூகமாக முடிக்கிற காரிமா இது,

பொண்ணோட எதிர்கால வாழ்க்கை பிரச்சினை இது, இப்போ நீங்களே சொல்லுங்கள் நாங்க அதன்படியே செய்கிறோம் °° என்று சொன்னார்கள்

வந்து கேட்டவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லுவது என்றே தெரியவில்லை திகைத்து நின்றார்கள் வாயடைத்து,

இப்படிப்பட்டவளை வெட்டி பொட்டு வைத்துக்கொண்டிருப்போம் என்று அவர்களிடம் சொல்ல துணிவு இல்லாமல் நினைத்துக்கொண்டு வந்ததே தப்பு என்று எண்ணினர்

அதற்குள் °° இரண்டாவது தெருவில் உள்ள ஒருவர் வீட்டிலும் இதே கதை தான் நடந்து கொண்டு இருக்கிறது°° என்றார் ஒருவர்

கொஞ்ச நேரம் கழித்து °° மூனாவது தெருவில் ஒருவர் வீட்டிலும் இதே கதைதான் நடந்து கொண்டிருக்கிறது
°° என்றார் வேறொருவர்

°° இப்படியாக நாலு பெண்கள் கல்யாணம் ஏதும் ஆகாமல், காதல் கீதல் என்ற பிரச்சினை இல்லாமல், பலாத்காரம் என்ற ஒன்றும் இல்லாமல்,

ஒரே சமயத்தில் கர்பமாகி இருப்பது கணக்கில் வந்தது,

விவிலியத்தில் எழுதப்பட்டிருக்கிறது கணவன் உதவி இல்லாமல் மரியாள் என்பவள் பரிசுத்த ஆவியால் கருதறித்தாள் என்று,

அப்படி பார்க்கும் போது இவளுக்கும் அப்படி தான் இருக்குமோ இன்னொரு ஏசுபிரான் பிறக்கப் போகின்றாறோ என்று ஒரு சந்தேகம்

இது இல்லாமல் இன்னும் எத்தனை பேர் பெயர் கணக்கெடுப்பில் சேர இருக்கிறதோ தெரியாது°° என்றார்கள்

ஒருவர் சொன்னார் °° ஏம்மா இதுக்கு யார் காரணமோ கேட்டுத்தெரிந்து அவனை அழைத்து வந்து அவனுக்கே கட்டிவைப்பதை விட்டால் வேறு வழியில்லை°° என்றார்

°° நாங்களும் சாந்தமாகவும் கேட்டோம், அடித்து உதைத்தும் கேட்டோம், கேட்ககூடாத முறையில் கூட கேட்டு பார்த்துவிட்டோம்,

எனக்கு எப்படி இப்படி ஆச்சின்னே தெரியாது என்றல்லவா சொல்கிறாள் சொல்லுங்க என்ன செய்யலாம் என்று நீங்களே சொல்லுங்கள் நாங்கள் உங்க சொல்படியே கேட்கிறோம் உங்கள் தொல்லை சரியாகிவிடும் °° என்றார்கள்

இதற்கு என்ன வழி செய்யலாம் என்று ஒருவருக்கும் ஒன்னும் புலப்படவில்லை

ஊர் பெரிய மனிதர்கள் கவணத்திற்கு போனது கூட்டம் போட்டார்கள்

என்னங்க இது அதிசயமான நிகழ்வாக இருக்கு; தன்னை கெடுத்தவன் இன்னவன் என்று ஒருத்தி கூட சொல்ல மாட்டேன் என்கிறாள்களே,

பயமுறுத்தியும் கேட்டால் எனக்கு யாருன்னே தெரியாதுன்னு அடிச்சி சொல்றாளுங்களே, இவ்வளவு ஆனதுக்கு பிறகும் சம்மந்தப்பட்டவனை காப்பாற்ற மறைக்கிறாள்களோ

என்னங்க நீங்க இங்கே இவளுங்க மானமே காத்துல பறக்க விட்டுக்கொண்டு எவளாவது சம்மந்தப்பட்டவனை காப்பாற்ற நினைப்பாளா அவர்களுக்குள்ளே அடிபடும் பேச்சு

எப்படி கண்டுபிடிப்பது என்று புரியவே மாட்டேங்கிது பெரும் புதிராக இருக்கிறது எல்லாரும் போன பீரியடுல ஊர் பெரிய மனிதர்களாக இருந்தவங்களாச்சே

அவங்க மானம் மரியாதை தரைமட்டமா ஆகிவிடும் போல் தெரிகிறதே;

இன்னைக்கு அவங்களுக்கு நாளைக்கு நமக்கு அதுவும் பெரிய ப்பெரிய இடத்தில் கைவைத்தவர்கள் யாராக இருக்கும்,

நம் கையில் எதுவும் இல்லை, பேசாம காவல் துறையிடம் ஒப்படைச்சிடலாமா எல்லாரும் யோசனப்பண்ணி சொல்லுங்க°° என்றார் தற்போதைய பெரிய மனிதர் பொருப்பில் உள்ளவர்

°° .மாயமாக இருக்கிறதே எவனாவது மந்திரவாதி களோட கைவரிசையாக இருக்குமோ மர்மமாக இருக்கிறதே தங்கமலை ரகசியத்தை கூட கண்டுபிடித்துவிடலாம் போல் இருக்கிறது என்று சந்தேகப்பட்டார்கள்

ஒருத்தியைப்போல எங்களுக்கு யாரையும் தெரியாது நீங்கள் நினைப்பது போல் யாரையும் காதலிக்கவும் இல்லை ஆனால் வைதியர்கள் கர்பமாகி இருப்பதாக சொல்கிறார் அது தான் எப்படி என்று தெரியவில்லை

°° நீங்கள் சொல்வது போல் யாராவது மந்திரவாதியை சந்தித்தால் என்ன?

யார்காரணம் என்று சொல்கிறார்களா என்று ஒருமுறை முயற்சி செய்து பார்த்து விட்டு

பிறகு வேண்டுமானால் காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாமே °° என்றார் ஒருவர்

°° இன்னொன்னு இங்கே சுத்துபட்டில் இருப்பவர்களை வேண்டாம்°° என்றார் ஒருவர்

இப்படி சொன்னதும் அப்படி சொன்னவர் மேல் எல்லாரும் சந்தேக நோக்கோடு பார்க்க

°° தூரத்தில் இருந்து கொண்டு வந்து பார்க்கலாம் அதற்கு உடந்தை யானவர்கள் இங்கிருந்தால் உண்மையை மறைத்து சொல்ல வாய்ப்பு இருக்கிறது அதனால்....°°

சந்தேகப்பட்டவர்கள் எல்லாரும் சந்தேகத்தை கைவிட்டார்கள்

°°ஒன்னு சொல்ல விரும்புகிறேன் சொல்லலாமா தலைவரே °°என்று கேட்டார் கூட்டத்தில் ஒருவர்

°°தாராளமாக சொல்லலாமே°° ஒப்புக்கொண்டார் தலைவர்

°°ஐயா விதைகளை விதைத்துவிட்டவன் நிம்மதியாக உறங்கலாம் ஆனால் எவனோ அவன் விதைத்த விதைகள் ஒருநாளும் உறங்கவே உறங்காது தலைவரே இதை விதைத்தவன் ஒரு நாள் வசமாக மாட்டுவான் அப்போது வசம்பு சுடுகிற மாதிரி சுட்டு கொழைச்சி பொட்டு வச்சிக்கிட்டா தான் திஷ்டி கழியும் தலைவரே °° என்றார்

°° மாட்டுவான் மாட்டுவான் °°

°° நீங்க சொன்னது சரிதான் அப்படியே செய்வோம் °° என்றார் பெரிய மனிதர் பொருப்பில் இருப்பவர்

வெளி மாநிலத்தில் இருந்து கைத்தேர்ந்தவரை அழைத்து வந்தார்கள்
அவர் பணம் காசு எல்லாம் வாங்கமாட்டார்,

அவர் இதைக் கொண்டு பிழைப்பு நடத்துகிறவர் இல்லை

இதை ஒரு தொழிலாக கருதாமல் ஒரு உதவியாக கருதுகிறவர்

நாம் கற்றுக் கொண்ட வித்தையை வீண் போகாமல் அவதிபடுவோர்க்கு அனுகூலமாக அமையவே பெரிதும் விரும்புகிறவர்

அவருக்கு இருக்கும் சொத்து இதன் மூலம் சம்பாதிக்கப்பட்டது இல்லை

அது அவர் சம்பாதித்ததும் இல்லை பரம்பரை சொத்து

ஆனால் ஒன்னு வாய்க்கு ருசியாக சமைத்துபோட்டால் போதும்,

அவரை அழைத்துவரும் வாகனச் செலவு நம்முடையது, அதே போல அவரை அனுப்பி வைக்கும் செலவு நம்முடையது சவுகரியமாக போய் விட்டது என நினைத்து அழைத்து வந்தார்கள்

நிறைந்த அமாவாசை, அவருக்கு உகந்த நாள் என்பது அவரோட கணிப்பு, அன்று

பூஜையை ஆரம்பித்தார் ஆன்மா ஒன்று மந்திரவாதியிடம் சரணடைந்தது அங்கே

ஊர் பெரிய மனிதர்களும் மற்றும் பயம் கொள்ளாதவர்களும் அவர்களுடன் இருந்தார்கள்

ஆன்மாவிடம் கேட்கிறார் மந்திரவாதி
°° இங்கே உம்மை அழைக்கவே இல்லை பிறகு எதற்கு வந்தாய் யார் நீ °° என்று

°° எந்த விஷயத்தையும் மனம்விட்டுப் பகிர்ந்துகொள்ளக் கூடிய நெருக்கம் என்பது ஆத்மார்த்தம் என்று பொருள் படுகிறது அந்தவகையில் நடந்த உண்மையை சொல்ல வந்தேன்°° என்றது ஆன்மா

°° உண்மையா என்ன உண்மை °°

மூன்று ஆண்டுக்கு முன்.....அதுவும் எதையோ சொல்கிறது மந்திரவாதி ஒரு பாட்டல் ஏற்றிக்கொணடவரைப் போல் ஆகிவிட்டார் அவர் ஏதோ உளருகிறார் யாருக்கும் புரியமாட்டேங்கிறது உம்...உம்...கொட்டிக்கொண்டு இருந்தார்

எல்லாவற்றையும் யாரோ அவருக்கு சொல்வது போலவும் அவர் கேட்டுக்கொண்டு பின் பெரிய மனிதர்களிடம் கேட்டார்
°° மூன்று ஆண்டுக்கு முன் இதே போல் கர்பமாகி ஒருத்தி உங்களிடம் ஞாயம் கேட்கவந்தாளா; அப்போது ஞாயம் தீர்த்தவர் யார்°° என்று கேட்டார் மந்திரவாதி

°°இவரு இப்போ நடக்கிறதை ஆராயாமல் பின்னால் நடந்ததை ஏன் தோண்டுகிறார்°° அவர்களுக்குள்ளே எழுந்தது

°° இப்போது அவர் மகளும் கர்பமாகி இருப்பதால் அவரும் இங்கே தான் இருக்கிறார் °°

(முன்னாள் பெரிய மனிதரை கையசைத்து ) வாங்க...இப்படி...°° என்று அழைத்தார் தற்போதைய பெரிய மனிதர்

°° அன்று அந்த ஞாயம் கேட்க வந்த பெண்ணை கெடுத்தது; நீங்கள் தீர்ப்பு கொடுத்து தூக்கில் தொங்கியவன் இல்லை என்பது தெரியவருகிறது °° என்றார் மந்திரவாதி

°° அப்போது கர்பமாகி இருந்தவள் கற்பூரம் கொளுத்தி இந்த அக்னி சாட்சி யாக சத்தியம் செய்து இவன்தான் என்று சொன்னாளே அதனால் நம்பிக்கை யோடு தீர்ப்பை வழங்கினேன் °° என்றார் முன்நாள் தலைவராக இருந்தவர்

°° என்னவென்று தீர்ப்பு வழங்கினீர் °°

°° அன்று அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையை கொடுத்தவன் செருப்பு தைப்பவன் மகன் தான் என்றாள்

அதனால போயும் போயும் ஒரு செருப்பு தைப்பவன் மகனை இந்த வீட்டு மறுமகனாக்கிக் கொண்டால்

மானம் மரியாதை கௌரவத்தை இழக்க நேரிடும்

என் மகளை வெட்டி பலி கொடுத்து பிண்டத்தை ஓடும் நீரில் கறைத்தாலும் கறைப்பேனே அன்றி

கௌரவத்தை கறைய விடமாட்டேன் என்று அவளின் பெற்றோர்கள் கலைக்க முடிவெடுத்த போது

கலைக்க முடியாத சூழல் ஏற்பட அப்படியும் கலைத்தால் அதை சுமந்திருப்பவள் உயிருக்கு ஆபத்து என்று அதே டாக்டர் சொன்னார்

வைதியர்கள் சொன்னபிறகு கலைக்கும் எண்ணத்தை கைவிட்டு அவளின் பெற்றோர்கள்

இறங்கி வந்து என் காதில் போட்டது மானம் போகாமல் இருக்க வேணும்னா அவன் உயர்ந்தவனோ தாழ்ந்தவனோ

அவனுக்கே கல்யாணம் பண்ணிக்கொடுக்க முடிவெடுத்து சொன்னது தான் அந்த தீர்ப்பு °°

தாம் உட்படாத ஒரு சம்பவத்தை நம் தலையில் கட்டிவைக்க பார்க்கிறார்களே என்று போனவன் போனான் தூக்கில் தொங்கி விட்டான் சம்மந்தப் படுத்தப் பட்டவன்

°°அதன் பிறகு அவள் என்ன ஆனாள்°°

°° கல்யாணம் கட்டிக்க யாரும் முன் வராததால் பிள்ளையை பெற்றுக் கொண்டு வீட்டோடவே இருக்கிறாள் ஒரு அவமானச்சின்னமாக°°

°°அந்த பெண்ணுக்கு சகோதரி ஒருத்தி இருக்கனுமே°°

ஆச்சரியமாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து க்கொண்டார்கள்,

வெளி மாநிலத்துக்காரருக்கு அவளுக்கு ஒரு சகோதரி ஒருத்தி இருக்கிறாள் என்று எப்படித்தெரியும்,

அவர் சொல்லும் உண்மை யின் பேரில் நம்பிக்கை கொண்டார்கள்

°° ஆமாம் இருக்கிறாள் கல்யாணம் கட்டிக்கொண்டு அவளின் புருஷன் வீட்டோடு இருக்கிறாள்°°

°° அவளின் தங்கையாகிய அந்த பெண்ணை இங்கே அழைத்து வரச்செய்தால் இப்போது அவள் என்ன சொல்கிறாள் என்ற உண்மை வெளிச்சத்துக்கு வரலாம் அழைத்து வர முடியுமா °°

°°அதற்கென்ன அழைத்து வரலாம்°° ( தனக்கு உதவியாக இருப்பவனை..அடே தம்பி)

°° ஐயா...இதோ போறேனுங்க°°

அந்த பெண் அழைத்து வரப்பட்டாள்
மந்திரவாதி அவள் கையை நீட்டச்சொல்லி கொஞ்சம் தண்ணீரை மந்தரித்து அவள் உள்ளங்கையில் ஊற்றி அருந்த வைத்தார் °° எங்கே முன்நாள் தலைவரே உங்க வாயால் நீங்களே கேளுங்கள்°° என்றார் மந்திரவாதி

°°ஏம்மா உன் கர்பத்திற்கு இன்னவன் தான் காரணம் என்று கற்பூரம் கொளுத்தி இந்த அக்னி சாட்சி யாக இவன்தான் என்னை கெடுத்தவன் என்று ஒருவனை காட்டினாயே

அவனும் அப்படி ஒன்றும் நடக்கவே இல்லை என்று தூக்கில் தொங்கிவிட்டது உனக்கு ஞாபகம் இருக்கிறதா°° என்று கேட்டார்

°° ஐயா...என்னை மன்னிச்சிடுங்க அன்று நான் அப்படி பொய் சொன்னதற்கு காரணம் என் அக்கா புருஷன் தான்

என்னை கர்பமாகியதற்கு காரணமே என் அக்கா புருஷன் தான்

அவன் மிறட்டிய மிறட்டலுக்கு பயந்து ஒரு அபாண்டமாக பொய்யைச்சொல்லி அநியாயமாக ஒரு உயிரை கொன்று விட்ட கொலை காரியானேன் அந்த பாவத்தை தித்திக் கொண்டிருக்கிறேன் ஐயா...°° என்றாள்

°°அடப்பாவி.... அப்பாவி ஒருவனை அநியாயமாக தூக்கில் தொங்க விட்டுவிட்டாங்களே°° என்ற முனுமுனுப்பு குழுமியிருந்தோரிடம் எழுந்தது

°° நானும் என் அக்கா புருஷன் சொல்லச்சொன்னது போலவே சொல்லிவிட்டேன் மாமனுக்கு பயந்து;

அதை அவமானமாக எண்ணி அவனும் தொங்கிவிட்டான், தொங்கிவிட்டவனை நான் விரும்பியது என்னவோ உண்மைதான்

ஆனால் அவன் என்னை விரும்பினானா இல்லையா என்பது எனக்குத் தெரியாது

நான் அவன் செருப்பு தைப்பவன் மகன் என்பதை குறைவு படுத்தி பார்த்ததில்லை

காரணம் உயர்வு தாழ்வு சாதி மதம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை

ஒரு பொய்யை சொன்னால் அவன் எனக்கு கிடைத்துவிடுவான் என்ற நம்பிக்கையில் சொன்னேன்

அந்த நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போடுவான் என்று எதிர்பார்க்கவில்லை

அதனால் அவனது ஆன்மா என்னை மன்னிக்கும் என்றே நம்பி சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டு மன்னிக்குமாறு வேண்டுகிறேன் ஐயா..என்று கண்கலங்க கூறினாள்°°

°° எனது வாழ்நாளில் ஒருவர் இதே போன்று சம்பவத்தை கேள்விபட்டிருக்கிறேன் ஒருவரது ஆன்மா இன்னொருவர் மேல் ஐக்கிய மாகி தனக்கு வீன் பழி சுமத்தியவர்களும் தான் பட்ட அவமானத்தை அவர்களை படவைக்கவே அதனால் அது அதன் உக்கிரமதை தணித்துக்கொள்ளவே நடந்து இருக்கலாம் என்று நினைக்க தோன்றுகிறது,

அது யார் மேல் நுழைந்ததோ அந்நபருக்கும் தெரியாது நாம் என்ன செய்கிறோம் என்று அதை கண்டுபிடிப்பதும் சிரமம்

அப்படி ஏதாவது நிகழ்ந்திருக்குமோ என்ற சந்தேகம் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்கிறது,

நீங்கள் சூழ்நிலைக்கேற்ப தீர்ப்பை வழங்கியதின் பலன் இது இந்த தீர்பை ஆமோதித்தவர்கள் மகள்களும் கர்பமாகி தானே இருக்கிறார்கள்

இதிலிருந்து என்ன தெரிகிறது இன்னும் எத்தனையோ அழகான வசதியான குமரிகளை விட்டு

இவர்களை ஏன் தேர்ந்து எடுத்து இருக்கக்கூடாது என்ற சந்தேகமும் இருக்கத்தான் செய்கிறது °° என்றார்

°° அது உண்மை என்றால் அந்த ஆன்மாவே வந்து அடையாளம் காட்டினால் கூட

அவன் அதற்கு சம்மதிப்பானா மாட்டான் தூக்கத்தில் எழுந்து நடப்பவர்களைப்போல்

நினைவிழந்து நடந்தது, பிறகு இன்னொருவன் தூக்கில் தொங்கும் நிலை வந்தாலும் வரலாம் °°

°°இதற்கு முடிவுதான் என்ன°°

°°சிவனே என்று மரத்தடியில், அல்லது மின் கம்பங்கள் அடியில் நீங்கள் நின்றிருக்கும் போது

பட்சிகள் உங்கள் மேல் எச்சத்தை தெளித்து விட்டால் என்ன செய்வீர்களோ அதைத்தான் செய்யவேண்டி இருக்கும்

எனவே பிறரை குறைவு படுத்தும் போது அதற்கு அவர் தகுதி உடையவர்தானா என்பதை தீர விசாரிக்க வேண்டும்

அவராக தவறை தவறென்று மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் ஒப்புக்கொள்ளும் வரை,

அதற்காக மிறட்டுவது பயமுறுத்துவது இவ்வளவு பயமுறுத்தியும் உண்மையை தவறென்றோ தவரை உண்மை என்றோ ஒப்புக்கொள்ள வைப்பதை

அவனால் ஜீரணிக்க முடியாது வேறு வழியின்றி உயிரை மாய்த்துக்கொள்வான் °°

மந்திரவாதி அந்த பெண்ணை பார்த்து
°° இது விஷயம் உனது அக்காவுக்கு தெரியுமா °°

°° இந்த விஷயத்தை உன் அக்காவிடம் சொன்னால் உன் அக்காவையும் உன்னையும் குழிதோண்டி புதைத்துவிடுவேன்°° என்றான் ஐயா

°°இப்போது உண்மையை சொல்கிறாயே °°

°°இதுபோன்று இன்னொரு பெண்ணுக்கு நிகழக்கூடாது என்று நினைத்தேன் அதனால் இப்போது உயிரே போனாலும் உண்மை எல்லோருக்கும் தெரிந்தே ஆகவேண்டும் என்று நினைத்தேன் சொன்னேன் ஐயா°° என்றாள்

°° உன்னை அவனிடம் சேர்த்து வைத்தால் அவனோடு வாழ உனக்கு சம்மதமா °°

°° ஐயா நான் கெட்டுப்போனவள் இப்படியே இருந்துவிட்டு போகிறேன்

என் அக்காள் எனக்கு அக்காள் மட்டும் இல்லை என்னை வளர்த்த தாய்

இப்போதும் அவளால் தான் ஜீவிக்கிறேன் அவளாவது நல்லவிதமாக வாழட்டும்

அக்காவின் நிம்மதியை கெடுக்கும் எண்ணம் எனக்கில்லை°°

அக்காளுக்கு விஷயம் தெரிந்து தனது தங்கையை பார்த்து பேசி தன்னுடனே அழைத்து செல்ல வந்தவள்

தம்மிடம் கர்ப்பத்திற்கு காரணம் வேறு எவனையோ சொன்னாள் அவன் இல்லவே இல்லை என்று சாதித்து உயிரை விட்டுக்கொண்டான்

இப்போது தன் கணவனே தான் இதற்கு காரணம் என்ற உண்மை தெரிந்ததும் கணவனிடம் பயங்கரமாக சண்டையிட்டு விட்டு ஒரு லாயரை பிடித்து DNA டெஸ்ட் எடுத்து நிருபிக்க மகளீர் மன்றம்வரை செல்ல கணவன் மனைவியின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டான்

கோர்ட் மூலமாக கையாண்ட தின் பேரில்தான் உண்மையை ஒத்துக் கொண்டான் தன் தங்கைக்கு சகல உரிமைகளயும் வாங்கித்தந்தாள்

சொத்துக்களை தங்கையின் பிள்ளைக்கும் உரிமையை உருவாக்கி கணவனை பெட்டிப்பாம்பாக ஆக்கிவிட்டாள்

எனக்கு ஒரு சந்தேகம் எழுந்து இருக்கிறது அதையும் சோதித்து பார்த்துவிடுவோமே என்று மந்திரவாதி தலைவரை கேட்டுக்கொண்டார் °°ஐயா தலைவரே கர்பமாக இருக்கிறார்கள் என்று சொன்ன அந்த நான்கு பெண்களையும் என்னிடம் அழைத்துவந்து காட்ட முடியுமா °°

°°கண்டிப்பாக°° என்றார் தலைவர் சற்று நேரத்தில் நான்கு பெண்களும் வந்தார்கள் அவர்கள் கையை நீட்டச்சொல்லி தன் கையில் வைத்திருந்த மந்திரக்கோலால் தடவி

தீர்த்தம் ஊற்றி அருந்தச்சொன்னார் அதன் பின் கையை நீட்டச்சொல்லி நாடி பார்த்தார்

இப்படியாக நான்கு பேர் கைகளையும் பார்த்துவிட்டு °°இவர்கள் நான்கு பேரும் கர்பமாகி இருக்கிறார்கள் என்று உங்களுக்கு யார் சொன்னது°°

°°நான்கு பேருக்கும் ஒரே சமயத்தில் எப்படி வாந்தி மயக்கம் வந்திருக்கும் °°

°°அவர்கள் கல்லூரியில் யோகா தினத்தன்று மாணவ மாணவிகளை மைதானத்திற்கு அழைத்து போய் யோகா பண்ண கற்றுக்கொடுத்து

யோகா தினத்தை கொண்டாடும் போது
கல்லூரிக்கு உள்ளே நுழைந்து

அவர்களது மதிய உணவு டப்பாக்களை திறந்து சாப்பாட்டில் வாந்தி மருந்தையும், மயக்க மருந்தையும் கலக்கப் பட்டிருக்கிறது

அதைத் தின்ற நாலு பேருக்கும் வாந்தி மயக்கம் உண்டானது இதை யோசித்து அவர்கள் பெயரை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யப்பட்டு இருக்கலாம்

இந்த சங்கதி ஊர் பூராவும் பரவ வேண்டும் இதை அறிந்து அவள்களை யாரும் கட்டிக்கொண்டு போகக்கூடாது என்ற நோக்கமே அது

அவரை அழைத்துவரும் படி செய்தார் முதலில் கர்பமாகி இருக்கிறாள் என்று சொன்ன அந்த அம்மையாரை அழைத்துவந்தார்கள்

°°ஏம்மா இப்படி சொல்லவைத்தது யார் அதற்காக உனக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள் உண்மை யை சொல்

நான் வெளி மாநிலத்துக்காரன் என்னைப்பற்றி நீ தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் பொய்யை சொல்

வேண்டாம் என்றால் உண்மையைச்சொல் °°என்றார்

அவள் யோசிக்கும்போது அவள் மூக்கின் வழியாக இரத்தம் கசிந்தது

மூக்கில் ஏதோ ஒழுகுவது போல் ஒரு உணர்ந்து மூக்கை துடைத்தாள் கையில் தெரிந்தது ஏதோ ஒன்றுமில்லை, சளியுமில்லை இரத்தம்

பயந்து போனாள் °°ஐயா என்னை மன்னித்து விடுங்கள் ஒரு பெண் மேல பத்தாயிரம் என்று நாலு பொண்ணுக்கும் நாற்பதாயிரம் வாங்கினேன் ஐயா

இப்படியொரு பொய்யை சொல்லச் சொல்லி சொன்னார்கள் பணத்தை கண்ணால் பார்த்ததும் மதிமயங்கி போயிற்று°° என்று உண்மையை ஒப்புக்கொண்டாள்

°°ஆஹா இவர் அல்லவா உண்மையான மந்திரவாதி°° என்று கூடியிருந்தோர் புகழாரம் சூட்டினார்கள்

°°பட்டிணத்தில் அந்த டாக்டரையும் கொண்டுவர முடியுமா‌°° என்று தலைவரிடம் கேட்டுக்கொண்டார்

°°சரிங்க ஐயா °°ஒரு காரில் ஐந்து வாட்டம் சாட்டமான ஆளை அனுப்பினார் தலைவர் அரைமணி நேரத்தில் டாக்டரை மூட்டைகட்டி தூக்கி வந்தார்கள்

மரத்தில் கட்டினார்கள் மந்திரவாதி கேட்டார் °°இந்த நான்கு பெண்களும் கர்பமாக இருக்கிறார்கள் என்று சான்று சீட்டு கொடுத்தது நீங்கள் தானே °°

தெரிந்து போய்விட்டதாக நினைத்து °°ஐயா இந்த சான்று வழங்க நாலு பொண்ணுக்கும் சேர்த்து ஒரு லட்சம் கொடுத்தார்கள் இப்படி சான்று சீட்டு தரச்சொல்லி இல்லை என்றால் உயிர் உனக்கு இல்லாமல் போய்விடும் என்று மிரட்டினார்கள் ஐயா °°

°°நீ கம்பௌண்டரா இல்லை டாக்டரா °°

°°முதலில் சொன்னதுதாங்க °°

°°இப்படி சொல்லச்சொல்லியவர் யார் °°

°°ஐயா முதலில் இந்த ஊரில் ஒரு பெண்ணை பெண்கேட்டு வந்தவர்தான் அவங்க கொடுக்க மறுத்திருக்கிறார்கள்

சரி என்று இன்னொரு பெண்ணை கேட்டு இருக்கிறார் அங்கேயும் மறுப்பு

இப்படியாக நாலு வீட்டாரும் மறுப்பு கூறியதின் பேரில் என்னை கட்டிக்காதவர்கள் வேறு யாரையும் கட்டவிடுவதில்லை என்று முடிவு எடுத்ததன் பிரதிபலிப்பு இது ஐயா °°

இதை கேட்ட பெண்வீட்டார்களும் ஊர் ஜனமும் அகோர கோபம் கொண்டிருந்தார்கள்

°°யாரும் கோபப்படாதீர்கள் நான்கு பெண்ணின் பெற்றோர்களை அழைத்து
உங்கள் பெண்களை கேட்டு வந்தவரை உங்களுக்கு தெரிந்து இருக்கனுமே °°

°°எவனோ ஒருவன் வந்து கேட்டது உண்மைதானுங்க, படித்துக்கொண்டு இருந்ததால் மறுத்ததும் உண்மைதானுங்க°° என்றார்கள்

°°இவர்கள் அம்புகள் இவர்கள் பொழப்பை இவர்கள் பார்த்து இருக்கிறார்கள் இந்த அம்புகளை எய்தவனை கண்டு பிடித்து தண்டனை கொடுங்கள்°° என்றார்

°°இவர் மந்திரவாதி இல்லை ஆள்காட்டி குருவி மாட்றாங்க பாரு ஒவ்வொருத்தரா இன்னும் யார்யாரெல்லாம் மாட்ட இருக்கிறாங்களோ °°

°°இந்த காரியத்தை முதலிலேயே செய்து இருப்பேன் எனக்கு முழு கதையும் தெரிந்திருக்க வேண்டுமே °°

°°அப்போது தானே உண்மை எது பொய் எதுன்னு உங்களுக்கும் புலப்பட்டிருக்கும்°° மந்திரவாதி

°°நான் பூஜையை ஆரம்பிக்கும் போது குறுக்கிட்ட அந்த தூக்கு போட்டு இறந்துபோனவனின் ஆன்மா சொன்ன உண்மைகள் இது அனைத்தும்°° என்றார்

°°இப்போது பெயர் கெட்டுவிட்டதே அவர்களை யார் கட்டுவார்கள் இதற்கு ஏதாவது பரிகாரம் சொல்லுங்க ஸ்வாமி
அதையும் செய்துவிடுகிறோம்°° என்றார் கள் நான்கு பெண்களின் பெற்றோர்கள்

°°அதற்காக கவலைப்படாதீர்கள் இவ்வளவு செய்த அந்த ஆன்மா இதையும் செய்தபிறகுதான் அது சாந்தி அடையும் என்று நம்புகிறேன் அதனால் அந்த ஆன்மாவை நம்புங்கள் நல்லதே நடக்கும்°° என்றார் மந்திரவாதி

ஊர் ஜனம் ஒன்று கூடி அவனது ஆன்மா சாந்தி பெற பூஜை நடத்தினார்கள் இதுவே ஆண்டாண்டுக்கும் நடத்த முடிவு எடுத்து கொண்டார்கள்

மந்திரவாதியை நல்ல முறையில் அவர் சந்தோஷம் படும்படிக்கு அனுப்பி வைத்தார்கள்

எட்டோட எட்டாவது நாள் நான்கு சகோரர்கள் வந்தார்கள் பெண் கேட்டு °°உங்கள் பெயரை கெடுத்த உங்கள் ஜென்ம விரோதியை கண்டுபிடித்து சங்கதி அனைத்தையும் அறிந்த பின்தான் உங்களிடம் வத்தோம்°° அந்த நான்கு பெண்களையும் ஒரேவீட்டு மறுமகள்கள் ஆக்க கேட்டார்கள், சம்மதமோ சம்மதம் என்று தெரிவித்தார்கள்

°°இப்போ அவன் உங்கள் எதிரில் கிடைத்தால் நீங்கள் அவனை என்ன செய்வீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா °°

°°அவனை கட்டி வச்சி பாம்பு தோலை உரிப்பதைபோல் உரித்து விடுவோம்°° என்றார் கள் பெண்களின் பெற்றோர்கள்

°°நாங்கள் உங்களை கேட்கவில்லை
நான்கு பெண்கள் கிட்ட கேட்கிறோம் காரணம் வலியை தெரிந்தவர்களின் வலிமையை தெரிந்து கொள்ள கேட்கிறோம் °°

°°முதலில் கல்லறை தோண்டிவிட்டு அந்த சில்லரை பயலின் பல்லறை உதிரும்வரை அந்த கல்லறையை அடையும்வரை உதைப்போம் அதன் பிறகே உங்களுக்கு எங்கள் கழுத்தை தாலிகட்ட நீட்டுவோம் °°

°°அப்படி ங்களா முதலில் நம் நிச்சயதார்த்தம் நிறைவேறட்டும் பிறகு
நீங்கள் சொன்னபடி நடக்கட்டும்°° என்றார் கள் சடங்கு முடிந்தது

°°வாங்கள்°° என்று நால்வரையும் அழைத்து போனார்கள் அவர்கள் வந்த காரில் டிக்கியை திறந்தார்கள் அங்கே அவன் கட்டுப்பட்டு கிடந்தான்

அவனை அழைத்து கொண்டுபோய் பஞ்சாயத்து தலைவர்கள் முன்னால் நிறுதினார்கள்

அங்கே அவன் வாக்குமூலத்தை எழுத்து மூலம் எழுதவைத்து ஊர் ஜனங்களை சாட்சியாக்கி கையொப்பம் வாங்கிக் கொண்டு பெருந்தன்மை யோடு துரத்தினார்கள்

அவனது மனஸ்தாபம் நான்குபேரும் என்னை நிராகரித்து விட்டார்களே அவர்கள் என்னை நிராகரிக்கும் அளவுக்கு என்னில் என்ன குறை கண்டார்கள் என்பது எனக்கு தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றே இவ்வாறான செயலில் ஈடுபட்டான் அத்தோடு நிறுத்திக்கொண்டான் மேலும் எவளையாவது பெண் கேட்ட போய் அவளும் நிராகரித்து விட்டால் நான் எதற்கும் தகுதியில்லாதவன் என்றுதானே பொருள் அதனால் மனம் உடைந்து போனான் அவனை அவனே ஏமாற்றி க்கொண்டான்

ஒரே வீட்டு மறுமகள்கள் ஆனார்கள்
அன்று நாலு பெண்கள் கழுத்திலும் தாலிக்கயிறு ஏறியது அதேநேரத்தில் இங்கே அவனாகவே அவன் கழுத்தில் தூக்கு கயிறை மாட்டி தொங்கிவிட்டான்

அடைந்தால் மகாதேவி அடையாவிட்டால் மரணதேவி என்ற கதையானது

•••○○○•••
ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (25-Jul-19, 2:55 pm)
பார்வை : 249

மேலே