சதிவேலை
கருமேகம் ஆடையாகி
வானத்தை
போர்த்தியிருக்க காற்று
வந்து
விலக்கி பார்த்தது
வானத்து நிர்வாணத்தை
அதனால்தான் ஆடையின்றி
திரியவிட்டான் போலும்
ஆண்டவன்
ஆதாமையும் ஏவாலையும்
சாத்தானின் சதிவேலை
முக்காடு
முழுமையாகி விட
விலக்கி பார்க்கும் அவா
ரத்தத்தோடு
கலந்து விட்டதோ?