கற்பனையில்

கற்பனையில் மனம் மிதக்க

மூளையின் ரசாயனம் சமநிலை
இழக்க

தொலைந்து போன தூக்கத்தில்
கண்முன்னே

நீ மட்டும் உலவிக்கொண்டிருக்க

பேசிக் கொண்டே நடக்கின்றேன்

நிறுத்தாமல் உன்னிடம் நீயோ

அமைதியாக கேட்டபடி நடக்கின்றாய்

வேடிக்கைப் பார்க்கின்றனர்
போவோர் வருவோர் எல்லாம்

எழுதியவர் : நா.சேகர் (28-Jul-19, 9:18 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : karppanaiyil
பார்வை : 563

மேலே