கனவில் உன்னை கண்டேண்டி

கனவினிலே
உன்னை
கண்டேனடி
காதலையும்
உன்னிடம்
சொன்னேணடி

பதறிப்போய் நானும் நின்நேனடி
பாதியில் தூக்கத்தை
தொலைத்தேனடி
தயங்கி உன்னை பார்பேனடி
தடயம் மட்டும் வைப்பேனடி

சுற்றும் விழி பார்வையடி
என் மேல் மட்டும் பாயுமடி
என் மனதையும் உலுக்கி செல்லுமடி
தடுப்பணை வைக்க வழி இல்லடி
தாங்கி புடிச்சா என் கனவே போகுமடி

எந்நேரமும் நான் உன்னை நினைக்க
மறுநேரமே நீ என்னை நினைக்க
நினைவே இல்லா கனவில் கூட
நிஜத்தை தேடி ஓடுறேன்

சொப்பணங்கள் நானும் காண
சொர்க்கமாக நீ கனவில் வர
சொல்லிவைத்த பயிங்கிளி போல
செல்லமாக வந்து அனைப்பாய்

எழுதியவர் : கணேசன் நயினார் (29-Jul-19, 4:01 pm)
சேர்த்தது : Ganesan Nainar
பார்வை : 69

மேலே