நறுந்தொகை 24 - 27

24. சுடினுஞ் செம்பொன் தன்னொளி கெடாது.
25. அரைக்கினுஞ் சந்தனந் தன்மண மாறாது.
26. புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது.
27. கலக்கினும் தண்கடல் சேறா காது.

அதிவீரராம பாண்டியர்

பொழிப்புரை:

சுட்டாலும் சிவந்த பொன்னானது தனது ஒளி குறையாது. அதன் ஒளி மிகவே செய்யும்.

அரைத்தாலும் சந்தனக் கட்டையானது தனது வாசனை நீங்காது மிகவே செய்யும்.

அகிற் கட்டையை நெருப்பிலிட்டுப் புகையச் செய்தாலும் அது தீமையான நாற்றம் வீசாது; நன்மணங் கமழும்.

கலக்கினாலும் குளிர்ந்த கடலானது சேறாக மாட்டாது. அது தெளிவாகவே யிருக்கும்.

அதுபோல, நற்குணமுடைய பெரியோர் எவ்வளவு துன்பம் செய்தாலும் அவர்கள் தம் பெருமைக் குணத்தைக் கைவிடார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Jul-19, 11:07 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 83

சிறந்த கட்டுரைகள்

மேலே