கண்ணே கண்ணே
கண் மூடி கண் திறக்கும் நேரத்தில்
மின்னல் போல் நீ வந்தாய்
மின்னலைப் பார்த்தால்
கண் போய்விடும் என்பார்கள்
ஆம் உண்மைதான் கண்ணே
உன்னைப் பார்த்தேன் சிரித்தேன்
என் கண்ணில் இருந்து - நீ
மறைந்து விட்டாய் கண்ணே
கண்ணே உன்னைத் தேடி தேடி
கண்கள் களைத்து விட்டது
மீண்டும் வா மின்னல் போல் அல்ல
வான் நிலவு போல் வா...!!
--கோவை சுபா