விழிகளின் வழியே
*********************
மரக்கன்று நாட்டச் சொன்னதும்
வேரூன்றி விடுகிறது
எல்லோருக்குள்ளும்
பகமை உணர்வுகள்
*
வேரூன்றாமல் வளரும்
பகை மரங்களுக்கு
நீரோட்டமாகிவிடும்
காழ்ப்புணர்ச்சி ஆறுகள்
வற்றிப்போகும் நாளில்
கொஞ்சம் பசுமை மணல்
அள்ளிப்போக ஆசை வண்டியுடன்
காத்திருக்கிறேன்
*
என் வண்டியில் ஏறிக்கொண்ட
சில கோடரி மூடைகள்
காடழிப்புச் சாலைக்கான
பேருந்து என்றே நம்பிக்கொள்ளும்
நிமிசங்களில்
வெம்மை கொள்ளும் மனம்
அனலிட்டப் புழுவாகிறது.
*
என்னையும் புழுவையும்
காப்பாற்ற யாருமில்லா
அந்நேரத்தில் இரு ஆறுகள்
பெருக்கெடுத்துப் பாயத்
தொடங்குகின்றன
என் விழிகளின் வழியாக ..
*