அவர்
அவர்
பிறந்தநாள் வாழ்த்துங்க சார்
===================================
ஒருத்தரைப் பத்தி இங்க சொல்லணும்.. அவர்
இன்று இங்க இல்லை ... ஒருகாலத்தில் இங்கு இருந்தார் ... அவருக்கு அப்போது வயது 52..
பேரு யூஸ் பண்ணால் கூட
வேண்டாமுன்னு சொல்லுவார் இங்க இருந்தப்போ ம் .. நல்லவர் .. அப்படின்னா நல்லவர் .. நா நல்லவன் இல்லை (பட் அவர் ரொம்ப நல்லவர்) ஏன்னா அவர் செய்த நல்லவற்றிற்கான எந்த அடையாளத்தையும்
இங்கு விட்டுவைக்கவில்லை எப்படி வந்தாரோ அப்படியே போயிட்டார் . .. ஒரு பதினோரு முறை பேசிருக்கோம் .. அப்பக்கூட அவரைப் பற்றிய எதையும் அவர் சொல்லலை .. நானும் கேட்கவும் இல்லை ... அவரிடமிருந்து பழகிய இயல்பு தான் ஒன்றிரண்டு விஷயத்திலாவது என்னை மனிஷனாக்கி நிறுத்திப் போயிருக்கு
இங்க இருக்கும் ஒரு சிலரைத் தவிற என் உண்மையானப் பேருக்கூட யாருக்கும் தெரியாது ... சொல்லவும் விருப்பம் இல்லை
நம்மை சாரும் நன்மைத் தீமைப் போன்ற வினைகளுக்கு நாம் காரணங்களையோ
விளக்கத்தையோ கொடுக்கக் கூடாது..
அதுதான் எப்போதும் நாம் தெரிந்து போகின்ற
பாதையைத் தெளிவுப் படுத்திக் கொடுக்கும்
எத்தனை எத்தனை நல்லோர்களையும்
சிலர் பார்வைகள் அப்பாற்ப்பட்டுதான்
பார்க்கும் சில நாவுகள் வஞ்சம் பேசத்தான்
செய்யும் .. ஆதலால் நாம் வாழும் எந்த ஒரு அழகான சூழலுக்கான காரணங்களை மட்டுமே தேடிச்செல்வது சரியாகும்
காதுகள் கேட்கவேண்டாம் ..வாய் பேசாதிருக்கட்டும் .. கண்களில் கருணை இருக்கட்டும் .. விஷவார்த்தைகள் வேர்வரை
பாயும்.. ஆராயும் .. கதைசொல்லும் .. உன் முந்தைய நிஜமும் சொல்லும்..நாலுப்பேர் முன்பு ஏளனம் செய்யும் ..ஊர்ப்பார்க்கச் சிரிக்கும் கர்மமோ ஊழ்வினையோ நீ உத்தமம் என்றால் ஒப்புக் கொள் .. ஏன் என்றால்
பிழையின் ஆதிக்கத்திலிருந்து நீ விடைப்பெற்றுப் போகிறாய் இந்த அவமானங்கள் எல்லாம் யார் நினைத்தாலும் ஒருமுறைதான் சுடும் .. உன்னை அறிந்தவர்கள் இத்தனைப் பேர்தான்
இவர்களைவைத்து உலகத்தார் உன் முகத்தில் உமிழ்வதையும் கடந்துவிட்டால் .. இனி ஏதும் இல்லை . ஞான தீட்சை அதுதான் ..
திட்டாதது ஒன்றுதான் குறையென்றிருக்கும்.
தெரிந்தோ தெரியாமலோ ..
நாம் யாருக்கோ செய்த துரோகங்களுக்கும்
பாவங்களுக்கும் .. அவர்களிடமே நேரில் சென்று திட்டுவாங்கித் தீர்த்துவிட்டோமே யானால் அதுதான் .. மிகப்பெரியப் பாவ விமோச்சனம் என்பேன் ..
அவரால் நன்மை அடைந்தவர்கள் கூட அவரின் இன்மையில் ஏன் என்னிடமே புரளி பேசிக் கடந்தவர்களும் இருந்திருக்காங்க ..அவர் செய்ததை மறந்தும் .. தங்கள் முயற்சியைப் பாராட்டி சுயத் தம்பட்டை அடித்தவர்களை
மேடையில் பார்த்திருக்கேன். மனிதர்கள் எத்தனை சுயநலமானவர்கள் ம் ..உப்புக்கும் புளிக்கும் ஆகாத யார் யாரையோ ரோல் மாடல்
ஆக்கி பாராட்டிக் கிட்டிருந்தாங்க .
அந்த விழா முடிந்ததும் இவர்கள் பாராட்டியவர்களுக்கு .. நீங்கள் வாலாட்டும் வெறும் நாய்கள் மட்டும் தான்
நீங்கள் குழைவதும் அப்படித்தான் இருந்தது அன்று ..
இங்க எங்களுக்கு 7 ஸ்டார் ஃபெசிலிட்டேட் சாப்பாடுவகை இருக்கு .. பலக்காலங்களாவே
நான் இப்பேர்ப்பட்ட சாப்பாட்டை சாப்பிடுவதைத் தவிர்க்கிறேன் .. மதிய வேளைகளில் சாப்பாட்டை எடுத்து பேக் பண்ணிட்டு .. லேபர்ஸ் ஆஃபீஸ் பாய்ஸ் இப்படிக் கொடுத்திடுவேன் .. ஏன்னா எங்க சம்பளத்தில் ஒரு சதவீதம் தான் அவர்களுடைய சம்பளமா இருக்கும்
நம்ம கேபினை சுத்தம்செய்துவிட்டு
ஒரு குட் மார்ணிங் சொல்லிவிட்டுப் புன்னகைத்துக் கடக்கும் அவர்களை
அருகில் வைத்துவிட்டு ..சுய்ச் வசதிகளைப்
பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் எத்தனைப் பேருக்குத் தெரியும் . அவர்களின் அப்போதைய மனநிலை .. ஒரு லண்டன் டைரி
ஐஸ்க்ரீம் நம்மில் யாரேனும் கொடுக்க மாட்டோமா என .. அதுபோல ஓவர்டைம் இல்லாத காஸ்ட் கட்டிங் சமயங்களில்
கடமையை முடித்துவிட்டு
அதே புன்னகை உதிர்த்து குட் மார்ணிங் சார் என்றுச் சொல்லும் வார்த்தைக்குப் பின்னால்
ஏதேனுமொரு ஐம்பது ரியால்கள் கிடைக்காதா என்னும் எச்சில் விழுங்கியத் தயக்கம் ..
வீட்டுக்கு போன் செய்திட்டு ஓவர்டைம் அதிகம் இல்லை செலவுப் பார்த்து பண்ணணும் என்றுச் சொல்லும்போதே ... அவர்களுடைய ஆசை முடக்கப் பட்டுக்கிடப்பதைத் தாண்டி "கடவுளே இந்தக் கஷ்ட்டத்தில் என் வீட்டைச் சார்ந்தவர்களைப் பார்த்துக்கோ" என்னும்
அவர்களுடைய குழந்தைகளுக்கான ப்ரார்த்தனையும் இருக்கும் ..
இதெல்லாத்தையும் சிந்திக்கக் கற்றுக்கொடுத்துவிட்டுப் போனவர் அவர்தான்
என் வார்த்தைகளுக்காக காத்திருந்தவரை நேரில் பார்த்துவிட்டு அந்த சிக்னலைத் தாண்டி .. ஓடிச்சென்று பின்னாலிருந்து
தோள் தட்டி அழைக்கிறேன் .. திரும்பியவர்
இனங்கண்டுக் கொண்டார் .. மென்மையாய் சிரித்தார் .. அப்போதும் அவருக்கு என் பெயர்த் தெரியாது .. எனக்கும் தான் ..
வெய்யில் சுர்ரென்று தாக்குகிறது... அதில் கோலம் கெட்டிருந்தார்... இருங்க ஒரு கால் டேக்ஸி புக் செய்றேன் வீட்டிற்குப் போய்டலாம்ன்னு சொன்னேன் .. சற்றுக் காத்திருந்துவிட்டு .. சாய்பாபா காலனி
பேருந்து தரிப்பருகே மார்க்கெட்டிற்குள் சென்றுவிட்டு சிறியப் பையொன்றில் .. நூல்கோலும் பீட்ரூட்டும் நிரப்பி எடுத்துட்டு .. பக்கத்திலிருந்த டீ ஷாப்பில் .. ஒரு பாக்கெட் ப்ரிட்டேனியா மாரி பிஸ்கட் ரெண்டு ஐந்து ரூபாய் ஃபைவ் ஸ்டார் ஐயும் வாங்கிட்டு வந்தார் .. டேக்சீ எல்லாம் எதுக்கு .. அரைமணி நேரம் தானே டவுன் பஸ் வரும் போலாம் ன்னு சொன்னார் .. அப்போது அங்கு தற்போதிருக்கும் கங்கா ஹாஸ்பத்திரியும் .. புது பேருந்து நிலையமும்
தொடங்கப்பட்டிருக்கவில்லை ..
வீட்டுக்குப் போனதும் மனைவி குழந்தைகளை
நலம் விசாரித்துவிட்டு .. சிறிது நேரம் குழந்தைகளோடு அளாவினார் ..
உறவினர்களும் வந்திருந்தார்கள் .. அசைவம் சாப்பிடுவிங்களா ன்னு கேட்டேன்
அதற்கும் புன்னகைத்தார் .. புரியாமல் திகைத்தேன் .. சரி சைவம் அசைவம் என எல்லாமே தடபுடலாகச் செய்திருக்கும் வரை வீட்டைச் சுற்றிப் பார்த்தார் ஏதும் பேசவில்லை
பின்பு அற்பம் உறங்கலாமா எனக்கேட்டார்
ஒரு கைலி இருக்கான்னு கேட்டார் .. கொடுத்தேன் .. படுக்கையை சரி செய்து அழைக்கும் நொடிக்கு முன்னே தரையில் படுத்துவிட்டார் .. ஒரு தலையணைக் கொடுத்தேன் .. வேண்டாமென மறுத்துவிட்டார்.. சமையல் ஆனதும் எழுப்பினேன் .. குளிக்க அனுமதி வேண்டுமே ன்னு கேட்டார் ..கூடவே ஒரு சோப்பு வேணுமேன்னும் கேட்டார் .. துவைத்து மடித்த தளுவத்தை எடுத்துத் தரும் முன்பு .. குளியலறைச் சென்றிருந்தார் .. நான் அவர் குளித்து முடிக்கும்வரை மாடியின் வெளிப்புறத்தில் அத்தளுவத்தோடு நின்றிருந்தேன்.. பொறுமையாகக் குளித்து
வெளியில் வந்தவரிடம் தளுவத்தைக் கொடுத்தேன் .. அதேப் புன்னகையோடு வாங்கினார் .. அதை இடுப்பில் மாற்றிக் கட்டிவிட்டு நனைந்த கைலியை சோப்புப் போட்டுத் துவைத்து அவரேக் காயபோட்டுவிட்டு .. அதே துணியை மாற்றி
கீழே முகப்பறைக்கு வந்து அமர்ந்து குழந்தைகளோடு விளையாடிப் பேசிக் கொண்டிருந்தார் ..
சாப்டலாம் வாங்க ன்னு கூப்பிட்டேன் . எல்லோரும் சாப்பிடட்டும் நான் பிறகு சாப்பிடறேன்னு சொன்னார் .. அவர்கள் சாப்பிடுவதை அதே பொறுமையோடு கவனித்தார் . எல்லோரும் சாப்பிட்டுவிட்டுப் போனார்கள் பின்பு நானும் அவரும் அமர்ந்தோம்
சிரிச்சிக்கிட்டே, இதெல்லாம் மறந்து வெகுநாட்கள் ஆச்சி ..இப்படி நீங்க எனக்கு
சோறு காமிச்சா ..அப்றம் பொறாமை வந்திடும் .."'''' வீடில்லாதவனை அழைத்து புது வீட்டை திறக்கச் சொல்லுவதும்
குழந்தை இல்லாதவனை அழைத்து
ஒருக் குழந்தைக்கு பெயர்ச் சூட்ட சொல்லுவதுபோல ""பாருங்க எனச் சொன்னார் .. இலையில் சோறுப் போட்டாள் என் மனைவி .. சோற்றில் கைவைத்தவர் .. என்ன நினைத்தாரோ யாரை நினைத்தாரோ என்னவோ ..
.. பழைய சாதமும் மோரும் இருக்குமா ன்னு தயங்கித் தயங்கிக் கேட்டார் .. அதுவரை அவருடைய நிகழ்வின் ஆச்சர்யத்திலிருந்து
விடுப்பட மறுக்கிறேன் ... அதில் நின்று மேலும் திகைப்பூட்டுகிறார் .. மனைவி ஏங்க சார் ஏதும் நல்லா இல்லையா என்றாள் .. அதற்கும் பொறுமையாக புன்னகைத்துக் கொண்டே அதெல்லாம் இல்லை மா .. இதெல்லாம்
பழக்கமில்லை கொஞ்சம் பெரிய மனசுப் பண்ணி பழைய சாதமும் மோரும் பெரிய வெங்காயமும் வாங்கிக் கொண்டார் ..
அவரே கரைத்தார்.. அந்தக் கரைசலைக் குடிக்கும் போது .. அவருடையக் கண்களின் வழியே தாரைத் தாரையாய்க் கண்ணீர்
வழிகிறது .. நான் கண்டும் கண்டுகொள்ளாதவன் போல்
என் இலையின் உணவைப் பொறுக்கிக் கொண்டிருந்தேன் .. மனஓடைக்குள்
எண்ண அலைகளைக் கிழித்து
படகுப் பாய்ச்சல் போல் விடையில்லாமல்
முன்னேறிக் கொண்டிருந்தார் ..
மோர்க்கரைசல் முடிந்ததும் அவரே எழுந்து பின் பக்கமாய் குழாயடிக்குச் சென்று பாத்திரத்தைக் கழுவி சுத்தம் செய்திருந்தார் .
தாம்பூலம் கிடைக்குமா ன்னாரு .. பழக்கமில்லைங்க சார் .. ஒரே நிமிஷம் வாங்கிட்டு வந்திடறேனே ன்னு சொன்னதும்
தடுத்து வேண்டாம் கடை எனக்குத் தெரியும்தானே நானே கொஞ்சம் காலாற நடந்து போயி வாங்கிக்கறேன் .. நீங்க வராதிங்க .. நான் போயிட்டு வாரேன்னுட்டு போனார்
திரும்பி வந்தவர் .. சரி நான் இனி கிளம்பறேன் நேரமாச்சி வீட்டுக்குப் போயிட்டு .. வேறு நாலு இடம் வரைப் போகணும்னு சொல்லிட்டு
வீட்டுக்குள்ள வந்து மனைவிகிட்ட சொல்லிட்டு
குழந்தைகளுக்கு டாட்டா சொன்னவர்
கொஞ்சம் சாப்பாடு மீந்தியிருந்தா கட்டிக் கொடுக்கறீங்களா ன்னு கேட்டார் .. உடனே நான் .. அது எதுக்குங்க சார் நானே நம்ம வண்டியில ட்ராப் பன்றேன் .. அன்னபூர்ணாவில் இருந்து பார்சல் வாங்கலாம் சார் ன்னு சொன்னேன் ..
மறுபடியும் சிரித்தார்.. அதெல்லாம் .. நீங்க குழந்தைகளோடு இருங்க நான் பஸ்ஸில போயிக்கறேன் .. கொஞ்சம் சாப்பாடு கட்டிக் கொடுங்க ன்னு மெதுவான தோரணையில்
கேட்டார் .. மனைவி எவர்சில்வர் மினி பக்கெட் எடுப்பதைப் பார்த்தவர் .. அதெல்லாம் வேணாங்க .. இலையில கட்டி பேப்பர் ல சுருட்டி கவர்ல போட்டுக் கொடுங்க என வாங்கியவர்
சரி போய்ட்டு வரவா என வாசல் வரைச் சென்றுவிட்டு என் முகம் பார்த்து
சந்திக்கலாங்க ன்னு ட்டு போனவர்தான்
பின்பெப்போதும் நாங்கள் சந்திக்கவே இல்லை
Cut..
நம்ம கூட இருக்கும் யாரோ சிலர் ..நமக்காகத்தான் இருந்திருப்பார்கள்
நமக்காகவே வாழ்ந்திருப்பார்கள்..
நாம் புன்னகைக்க மகிழ்ந்திருப்பார்கள்..
நமக்கொருக் கஷ்ட்டம் என்றால்
உழன்றிருப்பார்கள்.. ஓடிவந்து உடன் நின்றிருப்பார்கள் .. ஆனால் எதையும்
நாம் கண்டுக்கொள்ளமாட்டோம் ..
காலம் கடந்தும் கண்டுகொள்ள மாட்டோம்..
எப்போதாவது அவர்கள் நம்மை
எதேர்ச்சையாகக் கடக்கிறபோது
"நீ இன்னும் இங்கதான் இருக்கியா
என்னும் ஒரு அசட்டுக் கேள்வியை
உதிர்த்து விட்டு க் கடப்போம்""
சில உழியில் அவர்களை நாம்
சுத்தமாய்த்
தொலைத்திருப்போம் .. வாழ்வில் செழித்திருக்கும் சமயம் புதியவர்கள் வந்திருப்பார்கள்..
நினைவும் பெயரும் மறந்து
அவர்களுடைய முகமும் நீர்மங்கலமாகி
நம் காட்சியிலிருந்து மறைந்திருப்பார்கள்
வாதையும் துன்பமும்
காலச்சக்கரமானது
சுழன்றுத் தரும்போது
மறந்துபோனவர்களைத் தேடுவோம்
"" அப்படித்தானே உறவுகளே ம்""