கனவு வாழ்க்கை

கனவு வாழ்க்கையில்
கவிதை வரையுறேன்
என் செல்ல கவிகுயிலே
நீ தான் பூங் குயிலே

உனக்காக நானும் மகிழ்வேன்
உறங்காமல் காத்து இருப்பேன்
பல இரவு உன்னை தேடுவேன்
உனக்காக தவம் கிடப்பேன்

காதல் கிளியேன நீ இருந்தால்
கடைசி வரை உந்தன் சிறகாவேன்
பாடும் குயில்யேன நீ இருந்தால்
உனக்கு துணையாய் குரல் கொடுப்பேன்

அவரை கொடிபோல உன் நினைவு
வளர்ந்து படர்ந்தே போகிறது
அடங்கமறுக்கும் என் இதயம்
மண்ணுக்குள் அடங்கி போகிறது

நினைவுகள் உள்ளே இருக்கியதால்
நினைவை இழந்து போகின்றேன்
காதல் காவியமே
அதை வரையும் ஓவியன் நான்

எழுதியவர் : கணேசன் நயினார் (31-Jul-19, 1:58 pm)
சேர்த்தது : Ganesan Nainar
Tanglish : kanavu vaazhkkai
பார்வை : 101

மேலே