தொடுவானம் கண்முன்னே
தொடுவானம் கண் முன்னே
தொடும் அளவில் தோன்றும்
நிஜ வாழ்வில் என் எதிரே
நீ இருந்தால் போதும்
கடல் இங்கு அலையாக
கரை வந்து சேரும்
கனவிங்கு என் வாழ்வில்
நிஜமாகி போகும்
மயில் தோகை போல உன்
மேனியை நான் கண்டேன்
மனதோடு உன் மனதை
நான் ஏந்தி கொண்டேன்
உயிரே ,உயிருள் உறங்கும் என் உயிரே
உறவே, என் இரவில் பூக்கும் தனி மலரே
மனமே உந்தன் சிலை போன்ற பிம்பம்
அழகே உன்னை நான் பார்க்க வேண்டும்
தயக்கம் எல்லாம் எனக்கிங்கு தோன்றும்
மயக்கம் மட்டும் நான் கொள்ள வேண்டும்
யார் இங்கு வந்தாலும்
எனை தூக்கி சென்றாலும்
மனம் மட்டும் உன்னை
தேடுமடி கண்ணே
பனிக்காலம் கூட
சூடாகி போகும்
உன் கண்ணில்
நீரை துடைக்க
நான் இருப்பேன் காலங்கள்