பல்லழகி

முத்துப்பவளம் பிய்த்தெடுத்து
கொத்துக் கொத்தாய்
தன் மாதுளைச் செவ்விதழ்
இடுக்கில் அடுக்கி வைத்திருந்தாள்
அருகே சென்றேன் முகம் மலர
முறுவலித்தாள்...
நிலத்தில் சிந்திய முத்துக்கள்
சூரிய ஒளி பட்டு என்
விழிகளைத் தாக்க
கண்கள் கூசினேன்
காந்தத்தால் வசீகரிக்கப்
பட்ட இரும்புத் துகள்
போன்று என்னிதயம்
அவள் பால் ஆட்பட்டு நின்றது

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (31-Jul-19, 1:40 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 151

மேலே