அடியார் அடி போற்றி காண்போம் கயிலாயம்
அடியார் அடி போற்றி காண்போம் கயிலாயம்
**************************************************************************
( இன்று திருவையாறில் "அப்பர் " பெருமானுக்கு இறைவன்
கயிலாய காட்சி கொடுத்த நாள் )
அமுதுறு இசையும் அருஞ்சுவை மொழியும்
அமைந்தநற் கனியும் அழுதழுங் குரலொடு
உமையொரு பாகற் குருகிடும் அடியார்
நமக்கெனப் பிறந்தார் ! நாடுதல் நலமே !!
(என அப்பரை போற்றி )
(பின் வரும் பதிகங்களை நினைவு கொள்வோம் )
" சகம்அலாது அடிமை இல்லை தான்அலால் துணையும் இல்லை
நகம்எலாம் தேயகக் கையால் நாள்மலர் தொழுது தூவி
முகம்எலாம் கண்ணீர் மல்க முன் பணிந்து ஏத்தும் தொண்டர்
அகம்அலால் கோயில் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே "
" உமைஅலாது உருவம் இல்லை உலகுஅலாது உடையது இல்லை
நமை எலாம் உடையர் ஆவர் நன்மையே தீமை இல்லை
கமைஎலாம் உடையர் ஆகிக் கழல்அடி பரவும் தொண்டர்க்கு
அமைவு இலா அருள்கொடுப்பார் ஐயன் ஐயாறனார்க்கே "
(திருமுறை -- 4 40 வது பதிகம் )