தூது விரையுமோ துணை வருமோ
விரைந்து ஓடும் வெண் மேகமே /
விரக்தியின் விளிம்பில் /
என் விசும்பும் மனம் /
என்பதைக் கூறுவாயோ?
இடியோடு வரும் புயல் மழையே/
இருண்டு போனது /
என் இதயம் என்பதை /
இரவோடு இரவாகச்
சொல்லி விடுவாயோ?
வட்டமிடும் பட்டாம் பூச்சியே /
தீ பட்டுத் துடிக்கும் விட்டில் பூச்சாக/
அவன் (ள்) விரல் தீண்டாத
உடல் துடித்து மடிவதை/
நின்று உரைத்து விடுவாயோ?
கிழக்கே தோன்றி மேக்கே
மறையும் கதிரவனே/
கருகிப் போனது என் கற்பனைச் செடி/
என்னும் செய்தியை சுமந்து/
அவன் (ள்) காதிலே கொட்டி விடுவாயோ?
பனி தொட்ட சுகத்தில்
சிரித்து நிற்கும் முல்லை மலரே /
நான் சிரிக்க மறந்து /
சிந்தனைக்குள் அமர்ந்து இருக்கும் /
கதை தனை சுகமாய் வீசும் /
தென்றலோடு இணைந்தே/
தேடி அவனிடம் (ளி) தூதாக
சென்று வருவாயோ?
உள்ளம் விறகாய் எரிகிறது/
கண்ணீர் வெள்ளம் சூடு ஏறிக்
கொதித்து வடிகிறது /
அவன் (ள்) விரல் கொண்டு /
துடைத்தால் என்னவாம் /
பதில் அறிந்து வந்து விடு/
அண்டமெல்லாம் உலா வரும்
வட்ட நிலாவே /