யாரடா நீ

இன்பக் கடலை வரமாகக்
கொடுக்க வந்த இறைவனா_?
துன்பம் நீக்க வந்த
துணைவனா_?


துயரத்தில் இருந்து கரை
சேர்க்க வந்த உத்தமனா_?
தூரமாக நின்று வேடிக்கை
பார்க்க வந்த வேடுவனா_..?


நீ யாரோ இவரோ நான்
அறியேன் /
உனையே நாடும் என்
மனதுக்கு வேலியிடவே
முடியாமலே அல்லாடுகிறேன்...


ஆசை ஒரு புறம் அவஸ்தை
மறு புறம்/
அசையாதோடா உன் மனம் ..../

வெள்ளோட்டமாக என்
கண்ணில் ஓடும் /
நீருக்குப் பாதையாக மாற்றினாய்
என் கன்னமதையடா.../

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (1-Aug-19, 1:33 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : yarada nee
பார்வை : 92

மேலே