பேருந்தில் அவள்
உயிர்உள்ள வண்ண மீன்கள் கண்ணாடி பெட்டிக்குள் ,
தவிர மூக்குக்கண்ணாடி குள் முதலாக கண்டேன்.
ஆர்பரிக்கும் அழகு,பளிங்கு சிலைக்கும் வியர்க்கிறது .
அட டா,
அவள் ஷாலின் ஓரத்தை வைத்து ஒற்றி எடுக்கிறாள் .
ஒரு கரம் பேருந்தின் கம்பியையும் ,மறு கரம் கை பேசியும் வைத்து இருக்கிறாள் .
அவள் கைவிரலில் மோதிரங்கலாய் அணி வகுக்க என்ன தவம் செய்தன ஓ.
அவள் பேசும் ஆங்கிலம் ;மொழியை கேட்டு வெட்கப்படும்.
அவள் கண்கள் கம்பி இல்ல மின்சாரம் கடத்திகள் ,
அவள் சிரிப்பு , கோடி பட்டாம்பூச்சி பறக்கவிடுகிறது ,பார்ப்பவர்களின் வயிற்றில் .
வருகின்ற நிறுத்தத்தில் அவளுக்கு ஒரு ஜன்னல் ஓரஇடம் கிடைத்தது ,
காற்றின் வேகத்தால் அவள் கார்குழல் கலைந்தன ,
கலைந்த கூந்தலை அள்ளி முடிக்கிறாள் ,
ஒரு அல்லி ராணி .